பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

290 சிந்தாநதி யைப் போட்டுக்கொண்டு, அதன்மேல் கவிழ்ந்து கொண்டு அந்தத் தவிப்பும், உடல் பூரா வேர்வையில் ஜலகண்டம். அவசரமாக ஸ்டோவ்வை மூட்டி, கோதுமைத் தவிடை வறுத்து (நல்ல வேளை, என் வீட்டில் இருந்தது. அது என்ன காரணமோ ?) முதுகிலும் மார்பிலும் ஒற்றினேன். இதற்கு உடனே ஹிதம் தரும்படி, புகை பிடிக்க ஒரு சூரணம் இருக்கிறது (சித்தா? யுனானி, இது, நல்ல வேளை, மனுஷனிடமே இருந்தது. ஆவன செய் ததும் சுபம் கழன்று, கரண்டு தொண்டைக்கு வருவது தெரிந்தது. துப்பும் பேலின்? ஊ-ஹ-ம். சமயத்துக்கு ஊசியும் தட்டானோடு இதுவும் உருண்டோடிப் போய் விட்டது. நான் என் வசத்தில் இல்லை. கையை நீட்டி னேன். தயங்கினார். . . “ஸ்பிட், மேன், யூ ஃபூல்' எனக்கு ஏன் இந்தக் கோபாவேசம்? கொண்டுபோய் எறிந்துவிட்டு (ஐயே!) கையைப் பாத்ரூமில் எட்டுத் தரம் சோப்புப் போட்டுக் கழுவி விட்டு வந்தேன். என்னவேணுமானாலும் ஆகட்டும். ஐ குட்டு நத்திங் மோர். . அவர் அவஸ்தை தணிய ஆரம்பித்துவிட்டது. காட்டுப் பூனை சிறுகச் சிறுக வாபஸ், மூச்சு இயல்புக்கு, ஒரு வழியாக, மீளத் தலைப்பட்டது. இப்போ ஆயாசம்தான். எழுந்து அணைத்துக்கொண்டார். "மிஸ்டர் ராமா! யு ஆர் மை பிரதர்!” என்னை விடுவித்துக்கொள்ள முயன்றேன். முடிய வில்லை. எங்கிருந்து இந்த இரும்புப் பிடி? "யு ஆர் மை பிரதர், மிஸ்டர் ராமா!"