பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 & சிந்தாநதி பதிந்திருந்தது. அவர் முகத்திலிருந்து பத்து வருடங்கள் உதிர்ந்திருந்தன. "லுக் மிஸ்டர் ராமா, புருஷன் இறந்துபோனால் ஒயிப் மறு கண்ணாலம் கூடாது. திலக் அழிக்கனும், வளையல் உடைக்கனும், வெள்ளை ஸாரி. இப்படியெல் லாம் ரூல் இருக்குதே- இப்போ நடக்கறதை நான் சொல்லலே - பெண் ஜாதி டைய்ட் ஆனால், ஹஸ் பெண்டுக்கு எந்த ரூலும் கிடையாதா? அது என்னா ஒஸ்தி? இது என்னுடைய ஆக்யுமெண்ட். ஆனால் யாரும் ஒப்புக்க மாட்டாங்க. எத்தினியோ ஆஃபர் வந் திருச்சி. ஐ ரெஃப்யூஸ்ட், நாங்க ரொம்ப ரெஸ்பெக்ட பிள், வெல்த்தி ஃபேமிலி. ஒரு டைம் வைர வியாபாரம் செஞ்சிட்டிருந்தோம்." நீளமாகவே தமிழ் பேசிவிட்டார், சமயம் வந்தால், பாஷையும் வருகிறது. "யு லவ் யுவர் ஒய்ப் ஸோ மச்?” "ஐ டோன்ட் நோ. எனக்கு அப்படி ஒரு நியாயம் பட்டது. என்னை சேஞ்ச் பண்ண முடியல்லே.” உள்ளிருந்து ஒரு ஆள் வந்து, ஜிகினாப் பொட்டு வேலைக்குக் கேட்டான். தராசில் நிறுத்துக் கொடுத்தார். "ராமா, ஐயம் க்ளின். அன்னிலே ருந்து இப்போ வரைக்கி நான் எவ்ளோ சுத்தம்னு எனக்குத் தெரியும். ஐ நோ. நான் யாருக்கும் ஜவாப் சொல்ல வேணாம். உங்களிடம் சொல்றேன். என்னைப் பத்தி என்ன பேரெல்லாம் காட்டியாவுதுன்னு எனக்குத் தெரியும். ஐ டோன்ட் கேர். என் பிஸினெஸ் நேச்சர் அப்படி. லேடீஸோடே தான் எனக்கு பிஸினெஸ்.” வாய் விட்டுச் சிரித்தார். முத்து வரிசை (கட்டின பல்).