பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 299 கோபத்தினும் எனக்கு விதிக்கக்கூடிய கொடிய தண்டனை. இதோ விழிகளினின்று வழிய ஆரம்பித்து விட்ட இந்தச் சரங்களை எட்டாத உன் பாதங்களுக்குச் சமர்ப் பிக்கிறேன். இவைகளுக்குக் கூட எனக்கு உரிமையில்லை. இவை என் மூதாதையரின் கண்ணிர்ச் சரங்கள். என் வழி உனக்குச் சூட்டுகிறார்கள். தேவி! இதற்குக் கூடக் காரணம் நீதான் என்று சொல்வேன்.ஜீவனோபாயம் காரணமாக அண்ணாவின் நாளிலிருந்தே குடும்பத்தைக் கலைத்து நானா இடங்களில் சிதறி விட்டாய். உலகமே உனக்குச் சீட்டுக்கட்டு. எங்களை சுட்டிக் காட்டித் கொள்வதில், இந்தக் குடும்பத்தின் உதாரணத் தில், நான் உலகத்தைத்தான் சுட்டிக் காட்டுகிறேன். நீ உலகத்தை ஆள்வதே இப்படித்தானே! சீட்டை கலை. புதுசு புதிதாக வழங்கு. ஆடி ஆடிப் பழசானதும், உனக்கென்ன, இன்னொரு புதுக் கட்டை ஆட்டத்தில் தூக்கி யெறிகிறாய். - ஆனால் பயணம் என்னவோ ஒன்றுதான். அன்று முதல் இன்று வரை அதேதான். -வாழ்க்கை, விதி, லீலா.. என்ன வேனுமானாலும் அழை. எல்லாம் உயிரின் மறுபெயர்.