பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 39 “ “The Power of Silence”- 56p6) Liapl J Li LirTfrĝiĝ5rTĜ6v தொடணும் போல இருக்கா பார் ! ஒஹோ, அதனால் தான் ஐயா கொஞ்ச நாளா உம் மா?” ஒரு நாளைக்கு ஒரு வேளைக்கு வேலைக்காரி பெருக்க வருவாள். அந்தச் சமயத்துக்கு என் புத்தகங்களை என்னைச் சுற்றிப் பரப்பிக் கொண்டிருந்தேனானால், கையை ஆட்டிவிடுவேன். அவளுக்கு வலிக்கிறதா? ஆனால் எப்பவுமே, எங்கேயுமே, இப்படித்தான் என்று நினைக்கிறேன். ஒரு பண்டம் காணாமற் போனால், சந்தேகத்துக்கு முதல் காஷ-வல்டி வேலைக்காரிதான். இவள் வந்து இன்னும் வாரம் ஆகவில்லை. கல்யாண மாகி ஒரு வருடம் ஆகவில்லை. மாமியார் வீட்டோடு சண்டை போட்டுக்கொண்டு வந்துவிட்டார்களாம். புருசன் குடிக்கிறானாம், அடிக்கிறானாம். பார்க்க 5ು.೧ು மாதிரியாகத்தான் தோன்றுகிறாள். ஆனால் புதுக்கை. கை சுத்தம் பற்றி என்ன கண்டோம் ? சரிதான், என் தலையணையிலிருந்து அவள் எப்படி எடுத்திருக்க முடியும் சாத்தியத்துக்கும் பகுத்தறிவு நியாயத்துக்கும் சமயத்தில் புத்தி அவிந்துவிடுகிறதே! அவள் இன்னும் பெருக்க வரவில்லை. வென்னிர் அடுப்படியில் உட்கார்ந்து, கட்டையை உள்ளே தள்ளும் பாவனையில் என்னிடமிருந்தே ஒளிந்து கொள்கிறேன். "அப்பா ஏன்டா ஒரு மாதிரியா இருக்கா?” “uuri saisti gl: The Power of Silence.” "என்ன சொல்றே?” "சொன்னால் உனக்கும் புரியாது. எனக்கும் புரியாது.”