பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா, ச. ராமாமிருதம் * 41 வானத்தில் அங்குமிங்குமா, ஒண்னும் இரண்டுமாகத் தெளித்தாற்போல் சுடர்கள் ஏற்றிக் கொள்கின்றன. மோதிரத்தைத் தேடவா? அல்ல, என் நட்சத்திரத்தின் கண்ணிர்த் துளிகளா? "லார் : ஸார்! பாம்பு!” நானும் பார்த்தேன். கிட்டத்தட்ட ஐந்து அடி மஞ்சள் நிறம். சருகின் பழுப்பு மஞ்சள். நொடிக்கு ஒரு முறை நாக்கு வெளி நீண்டு, உடனே உள்வாங்கி- தேடுகிறது. முள்வேலி அடியில் இலைச் சருகுகள் சலசல. அம்மாவும் எனக்காகத் தேடுகிறாளா? பையன் கையில் கல்லை எடுத்துவிட்டான். எழுந்து ஒடிப்போய் விரட்டினேன். மொணமொனத்துக் கொண்டே மனமில்லாமல் நகர்ந்தான். ஆனால் நான் விரட்டத் தேவையே இல்லை. திரும்பி என் இடத்துக்கு வந்ததும் சோடையே கானோம். 女 ★ ★ உள்ளே நுழைந்ததும் நுழையாததுமாய்- 'உங்கள் மோதிரம் எங்கே?” காத்திருந்த கேள்விதான். ஆனாலும் குப் பென்று வியர்வை. "இதோ பார்.” ஏதோ ஆரம்பித்தேன். என் கையைப் பிடித்து இழுத்து, மோதிர விரலில் அவள் செருகியதுதான் தாமதம் என்னுள் ஒரு பெரும் சக்தி அலை எழும்பியதை அனுபவத்துக்குத்தான் அறிய முடியும். கிணறு பொங்கின மாதிரி.