பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிாலையில் கண் விழித்ததும் கண்ணில் படுவது இதோ என் பூமி, இரவு கண் மூடுகிறேன்; அப்பவே மாய்ந்தேனோ என்னவோ? என் புவனமும் என்னுடன் அழிகிறது. தினம் பிறக்கிறேன், பிறப்பிக்கிறேன், அழிகிறேன், அழிக்கிறேன். அன்றன்று ஒன்றொன்று அவனவன் பூமி. பிறத்தலுக்கும், பிறப்பித்தலுக்கும், அழிதலுக்கும் அழித்தலுக்குமிடையே பேசினேன். நீ என்றேன். அவன் என்றேன். எவன் என்றேன். இந்த நீயும் அவனும் எவனும் யாவன்? யாவும் எனக்கு அர்ச்சனைகள். பெரிது பெரிது புவனம் பெரிது. அதனினும் பெரிது சிந்தனை. அதனும் பெரிது நான்.' ஏனெனில், சிந்தனையில் புவனத்தையே சிருஷ்டிக் கிறேன்.