பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் : 45 y 'நெருப்பு என்றால் வாய் வெந்துபோக வேண்டும், என்று விழுந்துவிட்டது. கேலியாகவோ, ஒரு சில சமயம் பாராட்டியோ, இன்னும் அபூர்வத்தில் சொந்த வியப்பில், இந்த வாக்கியம் இன்னமும் எனக்கு நினைவு மூட்டப்படுகிறது. சொல் எனும் உருவேற்றம். 女 ★ 女 மனம் படைத்தேன் மானுடன் ஆனேன். மனம் எனும் சிந்தனையின் அத்தர். கும்-கும்-கம்-கம்-கமகம ஸ்ரி கம ப த-என்ன இது? இதுதான் சொல். மனம், மனஸ்-மனுஷ்-மனுஷ்ய. பவுருவும், ஆணவம், மணம், மாண்பு, மானுடம் மானுடத்தின் மாண்பைச் சொல்லி மரபுக்குச் சாசனமாகும் சொல். என் தாய், தந்தை, என் வீடு, என் நாடு, இமயத்தி னின்று இலங்கைவரை ராமன், சீதை, அனுமன் என்ற பெயரில் எண்ணற்ற சீலர்கள். வரைற்ற காலமாகத் திரிந்து, அவர்கள் பாதம் பதிந்த மண். இது என் மண். என் இறுமாப்பு. என் சொல்லின் இதழ்விரிப்பு. வழி வழி சிந்தனையில் பூத்து, பரம்பரையின் சாதகத்தில் மெருகேறிய சொல் எனும் நேர்த்தி. எண்ணத்தின் எழில். மணத்துடன், பூர்வ வாசனையும் கலந்து, ஓயாத பூப்பில், அழியாத என் புதுமையில் நான் எனும் ஆச்சர்யம். என் சிந்தனையில் புவனத்தை சிருஷ்டித்தேன்.