பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா. ச. ராமாமிருதம் * 51 "அப்புறம் அப்பா காலமானார். அடுத்த வருடமே அம்மா அவரைத் தொடர்ந்து விட்டாள். பிறகு இவளு டைய ப்ரசன்னம் எங்கள் உடலோடு, குடும்பத்தோடு ஊறிப்போன தன்மையாகி விட்டது. "என் பேரக் குழந்தைகளுக்கு இவள் வைத்யம் சரிப் படுமா? காலத்துக்கேற்றபடி அவர்கள் நர்ஸிங் ஹோம் ப்ராடக்ட்ஸ். "வாட் நெள? இவள் எங்களோடயே தங்கிவிட்டாள். இவளுடைய பிள்ளைகள் விழுந்து விழுந்து அழைக் கிறார்கள். ஆனால் ஏனோ இவளுக்கு அங்கே பிடிப்பு இல்லை. "இன்னும் பற்றுப் பாத்திரம் தேய்க்கிறாள். ஆனால் கை அழுந்தவில்லை. இவ்வளவு பெரிய குடும்பத்திற்கு வண்டிப் பாத்திரம் விழுகிறது. நீ தேய்க்க வேண்டாம். ஒன்னுமே செய்ய வேண்டாம் என்றால் கேட்க மாட்டேன்கிறாள். திருட்டுத்தனமாகச் சமயலறையில், மாமியாரும் நாட்டுப் பெண்களும் பாத்திரங்களை மறு படியும் தேய்த்தாகிறது. ஏதோ ஒரு கட்டத்தில் தனக்குச் சம்பளம் வேண்டாம் என மறுத்து விட்டாள். ரேழியில் ஒரு கந்தல் பாயில் படுக்கிறாள். வேறு கொடுத்தாலும் மறுக்கிறாள். "டே பாஸ்கர்! (எப்பவுமே கொஞ்சம் தோரனைதான்) நான் செத்துட்டா, நீ கொள்ளி போட்டுடு. ஆனால் உன் ஜாதி புத்தியைக் காண்பிச்சாலும், செத்தப்புறம் எனக்கென்ன தெரியப் போவுது, தெரிஞ்சு என்ன ஆவணும்? நெருப்புக் குச்சி யார் கிழிச்சாலும் பத்திக்கும். ஆனால் வர வர இப்போ, கொஞ்சம் ஞாபகம் பிசகறது. அதனாலதான் வேளையில்லாத வேளையில் என் வேட்டி யைக் கேட்கிறாள். இடம், வேளை, இங்கிதம் பிசகுகிறது. ஸோ வாட் இப்பவும், இவள் எங்களுக்கு அரண் !”