பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா.ச.ராமாமிருதம் 55 No. இந்தக் கன்னி வெண்மையைக் களங்கப்படுத்தும் பாபத்தில் போகேன். இந்தத் தம்பதிகள் எங்கிருந்தாலும் சரி, செளக்கியமாக இருக்கணும். உன் நல்லெண்ணம் இருக்கட்டும், இவர்கள் இப்போ எங்கெங்கிருப்பார்கள்? நான் அறியாமலே அடுத்த தெருவில், நாட்டின் எந்த மூலை முடுக்கிலோ? அமெரிக் காவிலிருந்து ஆஸ்திரேலியாவரை, ஏன், வட துருவம், தென் துருவங்களும் கூட, எங்காணும்- விஸ்ாதான் சிரமம், உலகமே கொல்லைப்புறம். ரிஸெப்ஷனில் ஒருவருக்கொருவர் தோளிடித்துக் கொண்டு, முகத்துள் முகம் கள்ளத்தனமாகச் சிரித்துக் கொண்டு, அத்தனை கும்பலிலும், இந்த உலகில் அவர்கள் மட்டும் தனி-இப்பவும் அப்படியே இருப்பார் களோ? Don't be a fool. அதெப்படி சாத்தியம்? குடும்பம் ஆகியிருக்க மாட்டார்களா? குழந்தைகள் பெரியவர் களாகியிருக்க மாட்டார்களா? அவர்களுக்கே வயதுஏன், கண்ணாடியில் உன்னைப் பார்த்துக் கொள்ளேன்! வெளிநாடு சென்றவர்களின் வாழ்க்கை. அவர்களின் குழந்தைகள்- இங்கேயும் ஒட்ட முடியவில்லை, அங்கேயும் வேண்டா விருந்தாளிகள். இப்படி ஒரு தனி வர்க்கமே உருவாகிக் கொண்டிருக்குமல்லவா? தங்களைப் போலவே, தங்களுக்குள் தேடிக்கொண்டு, தங் களைத் தேடிக் கொண்டு; இந்த நிலையைத் தவிர்க்கவே, பெற்றோர்கள் குழந்தைகளைத் தாத்தா பாட்டியிடம், ஹாஸ்டலில் அல்லது உள் நாட்டில் எங்கோ தங்க விட்டு, வருடங்களாகப் பிரிந்து, திரும்பச் சந்திக்கையில், அப்பவும் எப்படியிருக்கும்? முழுக்க சரியாயிருக்குமோ? யாராயிருந்தாலும் கொண்டாடிக் கொண்டேயிருந்தால் தான் உறவு; இல்லையேல், எல்லாம் யூகத்துக்குத்தான். இந்தக் கவலையெல்லாம் ஏன் உன் தலையெழுத்து? வீண் அக்கப்போர்.