பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 நிர்மாலியம் சிந்தா நதிக் கரையோரம் குப்புறப் படுத்து, ஜலத்துள் எட்டிப் பார்க்கிறேன். முகங்கள், நிழல்கள், உருவங்கள். எல்லாமே தெரிந்த முகங்கள் இல்லை. அன்று என்று மறுப்பதற்கும் இல்லை. மெதுவான பவனியில் யுகம் திரேதா, க்ரேதா, துவாபர, கலி-காலம் ஒரு முப்பட்ட கம் எனில், யுகங்கள் அதன் முகங்கள். "இப்படி எல்லாம் தெரிந்தமாதிரி உன் அதிகாரப் பூர்வம் என்ன?" எனக் கேட்டால், "தெரியாது.” முப்பட்டகத்தில் ஒரு இம்மி அசைவுக்கும் காட்சி மாறல் கூடின யுகம். - ராமாயணம், பாரதம், பகவத்கீதை, ஷா நாமா, அம்ருத மந்தன், அராபிய இரவுகள் iliad odesseyஇன்னும் எனக்குச் சொல்லத் தெரியாதது, எனக்கு முற்பட்டது, எனக்கு அப்பாற்பட்டது- விந்தை. அங்கும், எதிலும் நான் இருக்கிறேன். கதை கதையாம் காரணமாம், காரணத்தில் ஒரு தோர னமாம். ஒரே ඬුද් ஊரில் ஒரு ராஜாவாம், ராஜாவுக்கு