பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 : சிந்தாநதி அந்த மொற மொறப்பு, இடையிடையே ஜெவஜெவ வென மிளகாய், அப்படியே கல்லிலிருந்து தோசைத் திருப்பியில் எடுத்து வந்து வாழையிலைப் பாளத்தில் விடுகையில், பளப்பளவென எண்ணெயில் அந்த நகூடித்ர மினுக்கு. “அதன் மேல், மணலாய் உறைந்த நெய்யை உங்கள் அம்மா விட்டதும், அது உருகுகையில் உஸ் அப்பா !” அந்த நினைப்பின் சுரப்பில் தாடை நரம்பு இழுக்கிறது. கன்னத்தை அழுத்திப் பிடித்துக்கொண்டேன். "உங்காத்து அடை அதுபோல வார்த்துப் போடச் சொல்லுங்களேன்!” புன்னகை புரிந்தார். "நீங்கள் அடையின் பக்குவத் தையா சொல்கிறீர்கள்? அதன் கவிதையை அல்லவா பாடுகிறீர்கள்! இவளை அடை பண்ணச் சொல்கிறேன். இவளும் நன்றாகப் பண்ணுகிறவள்தான். ஆனால் நீங்கள் கேட்கிற அந்த அடை உங்களுக்குக் கிடைக்காது. அந்த மனுஷாள் இப்போ இல்லை. போயாச்சு!" மேலெழுந்தவாரியில் இது ஒரு சாப்பாட்டு ராம மாகப் பட்டால், இதன் உயிர்நாடி அடையில் இல்லை. அந்த மனுஷாள் இப்போ இல்லை. போயாச்சு! சிந்தா நதியில் ஒரு யாத்திரை.

  • 亨 & ళ్మి• శ్మీ అః