பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ו". லா. ச. ராமாமிருதம் * 77 தின் நிழல் மறைவில் ஒதுங்கி, விழுந்து, மரனாவஸ்தை யில் கால்களை உதைத்துக் கொள்ள ஆரம்பித்தது. அதன் இழுப்பு, கடைசி அமைதியில் அடங்குவரை பார்த்துக்கொண்டு நின்றேன். “ஸோ, அதற்கு விழுந்துவிட்ட மரணக் கடியைக் கடைசிவரை எதிரிக்குக் காட்டிக் கொடுக்காது, கொடுக் கக் கூடாத, முடியாத ஒரு கெளரவம், தன்மானம், ஜயம் கண்ட பின்தான் மரணம் எனும் தீர்மானம் அதற்கு. அதற்கே, அப்படி. அப்போ நாம்?. சிந்தா நதியில் அலைந்து செல்லும் ஒரு சருகு.