பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சம்பிரதாயமாகப் பத்திரிகைக்கு வரும் பாராட்டுக்கள் தவிர, என் பேருக்குத் தனிப்பட்ட முறையில் வந்த, இன்னமும் வந்துகொண்டிருக்கும் கடிதங்களிலும். வீட்டுக்கும், தற்செயலாக நான் வெளியூர் போக நேர்ந்த போது, நான் வந்திருப்பது எப்படியோ தெரிந்து பலப்பல துரங்களிலிருந்தும், - என்னைக் காண வந்தவர்கள், சிந்தா நதியின் அலை களில், தங்கள் நெஞ்ச நெகிழ்ச்சிகளை இதயப்பாளங் களை, பரிமளங்களை, சஞ்சலங்களை அடையாளம் கண்டுகொண்டது பற்றியும், சிந்தா நதி ஸ்னானத்தில் அவர்கள் அடைந்த அமைதி, ஆறுதல், தைரியம் பற்றியும், மனம் திறந்து வெளியிட்டுக் கொண்ட போது, அது ஒன்றும் நான் மார் தட்டிக் கொள்ளும் விஷயமாக இல்லை. ஏதோ வேளைக் கூரில், சொல்லின் மந்திரக் கோல் பட்டு இந்த அலைகள், வாசகனின் தருணத்துக் கேற்றபடி, ஆத்மாவின் திறவுகோலாக அமைந்திருக்கை யில், ஒருவிதமான அச்சம்தான் காண்கிறது. தரிசன பயம், மானுடத்தின்மேல் மரியாதை. Reverence for fife இந்த நிலைகளின் தூய்மையை ஆய நான் தக்கோன் அல்லன். இதோ நிறுத்திவிட்டேன். மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் கட்டங்கள் பற்றிப் பணிவுடன், அழுத்தமாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். புரிந்தது, புரியாதது இந்த இரண்டு நிலைகளுக்கும் உண்மையிலேயே என்ன வித்தியாசம் இருக்கிறது? இரண்டுமே தற்காலிக நிலைகள். - -