பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«» லா. ச. ராமாமிருதம் & 79 போகிறவனை இரு என்று தடுக்கமாட்டார். தானாக வும் வேலையிலிருந்து நீக்கமாட்டார். இதுவும் கொள்கை யைச் சேர்க் கான். ó ாந்ததுதா எப்படியோ மாதம் பாதி நாள் புஹாரியிலிருந்து பிளேட் வரவழைத்தாகணும். நித்தியப் படிக்கு அவருக்கு அசைவ உணவு இல்லாமல் முடியாது. சொந்த வீட்டுக்காரர், மாடியில் வாசம், கீழே அலுவலகம். ஒருநாள் அவருடைய நண்பர் ஒருவர், சமையலுக்கு ஒரு ஆளைச் சிபாரிசு செய்தார். ஸிந்தி எனக்கு எங்கே புரியும்? கிளுகிளு கடகட- தண்ணிரின் ஒட்டம் போன்ற ஒசை பாஷை, கூட வந்திருந்தவன்மேல் என் பார்வை சென்றது. அஞ்ஞாத வாசத்தால் அருச்சுனன்- இந்தச் சொற் றொடர் உடனே எனக்குத் தோன்றுவானேன்? 25, 26 இருந்தால் அதிகம். கறுகறு புருவங்களடியில் சாம்பல் நிறத்தில் தணல் விழிகள். அவை மேல் கவிந்த நீண்ட நுனி சுருண்ட ரப்பைகள், கூரிய மூக்கு. கூரிய மோவாய். ஜாதி வேட்டைநாயின் கம்பீர அமைதி. பரிச்சயம் முடிந்து, மாடிக்குச் செல்ல அவனைப் பணித்ததும், ஸேட்ஜிக்கு அவன் அடித்த ஸல்யூட்டில் ராணுவப் பயிற்சி தெரிந்தது. அவனுக்கு மாற்று உடை இருந்ததாகத் தெரியவில்லை. வந்தபடியே தங்கி விட்டான். முன் பணம் கொடுத்து எசமான் உதவினாரோ என்னவோ? உடனே அவன் காரியங்களில் இறங்கிய லாகவம், வியக்கத் தக்கதாயிருந்தது. அடுத்த நாளிலிருந்தே என் நண்பரின் நாட்கள் துளிர்ப்பு கண்டு, பரிமளமும் வீசத் தொடங்கின.