பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லா.ச.ராமாமிருதம் 81 (கட்டின பெண்டாட்டி, உங்களுக்கெல்லாம் சமைத்துப் போடணும்னு என் தலையெழுத்தா' என்று கேட்கிற நாள் இது!) மூக்கைச் சிந்திவிட்டு, ஈரத்தால் முகம் துடைத்து, பவுடர் அப்பி, முதுகைத் தட்டி, முத்தம் கொடுத்தாற் போல, வீட்டுக்கே ஒரு முகப்பு கண்டதும் சேட்டுக்கு ஐஸ் வைக்கும் நோக்கத்தில் ஈதெல்லாம் செய்ததாகத் தோன்றவில்லை. அவனுக்கு அடிப்படை யாக அசுத்தத்துக்கும் அவலக்ஷணத்துக்கும் இருந்த அலஹறிப்புதான் காரணம் என்று நினைக்கிறேன். தினமும் இரண்டு வேளை குளியல். ஒரு சமயம். தற்செயலாய் அவன் உடம்பைத் துவட்டிக்கொண்டே குளியலறையிலிருந்து வெளிப்படுவதைக் காண நேர்ந்தது. உடலின் ஒரு தோல் வயண்டாற்போல அப்படியா ஒரு சங்கதிரொளி நிறம்? பதினாறு கால் மண்டபத் துரண் ஒன்றிலிருந்து சிற்பம் உயிர்த்துப் புறப்பட்டாற்போல் தேகக்கட்டு. பென்சில் கோடுபோல் துளிர்மீசையில் லேசான தங்கச் செவ்வரி படர். ஒரு நாள் இரவு எல்லா வேலையும் முடிந்து, நண்ப ரும், நானும் அவருடைய அறையில் பேசிக்கொண்டிருக் கையில், அப்படி நான் வெகுநேரம் தங்குவதுண்டு- என் வீடு அவர் வீட்டுக்கு மூன்று வீடுகள் தாண்டி அடுத்த தெருவில் மூன்றாவது வீடு. மொட்டை மாடியிலிருந்து ஒரு தீர்க்கமான குரல் பாட்டில் புறப்பட்டது. இரவின் அந்த முதிர்ந்த வேளைக்கு, அகண்ட் வான் வீதியில், மேகங்கள் அற்ற, நகடித்ரங்களின் துணைபு மின்றித் தளித்து நின்ற முக்கால் நிலவில், வேப்ப மரத்தினின்று உதிர்ந்த பூவர்ஷத்தில், ஒளியும், நிழலுமாய் மரத்தின் இலைகள், பூமியில் வீழ்த்திய பிரம்மாண்டமான கோலத்துக்கு, சி ந - 6