பக்கம்:சிந்தாநதி-நினைவலைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 ஒருவருக்கு ஒருவிதமாகப் படுவது, அடுத்தவருக்கு வேறு விதமாகப் படுகிறது. அதே ஆளுக்கே வேறு சமயத்தில் வேறு விதமாகப் புரிகிறது. இன்றைக்குப் புரியாவிட்டால், நாளைக்குப் புரிகிறது. அட, கடைசிவரை, புரியாமல் இருந்தால்தான் என்ன? இருந்துவிட்டுப் போகட்டுமே! எல்லாமே புரிந்துவிடும், புரிந்தாகணும் என்று எதிர்பார்ப்பது முறை அன்று. அப்படி முழுக்கப் புரிந்து கொள்வதற்கும் அல்ல. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் - இதை நான் சொல்லவில்லை. விஷயம் அதனதன் உருவில், ஒரு ஒரு வழி வெளிப்படக் காத்திருக்கிறது. அதனதன் வேளையில் வெளிப்படுகிறது. விஷய தாதுக்களின் நியதியே இதுதான். மீண்டும் மீண்டும், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி - கர்த்தாவையும் சேர்த்துத்தான் அதன் சத்திய நிலை மாறாமல், ஆனால் உருமாறிக் கொண்டேயிருப்பதுதான். இதையே ஒரு மழுப்பல்தான் என்கிற வாதத்திற்கும் என்னிடம் மறுப்பு இல்லை. ஏனெனில், என்னுடைய இப்போதைய வளர்ச்சி நிலையில் இதற்குமேல் விளக்கமும் என்னிடம் இல்லை. புரிவதைக் காட்டிலும், வாசகன் உணரக் கூடியது, உணர வேண்டியது விஷயத்தின் தாக்குதல்; அந்த முதல் பாதிப்பு, Impression, impact. அந்த மோதலில் ஏற்படும் உள் நசுங்கல் (Inner dent) இதுதான் ரத்தத்துடன் கலந்து உள் சத்தில் ரஸாயனம் நிகழ்வது. சின்னச் சின்ன அலைகள், படுபடு ஆழங்கள்,