பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/103

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97


வெண்மேகம், வெண்ணீறு அணிந்த சிவபெருமானாகவும், கார்மேகம் கருநீல வண்ணனாகவும் தெரிகின்றது கம்பருக்கு.

"நீற னிந்த கடவுள் நிறத் தவன்
ஆற ணரிந்து சென்று ஆர்கனி மேய்ந்துஅகில்
சேற ணிக்க முலைக் கரு மங்கைதன்
வீற ணிந்தவன் மேனியின் மீண்டவே"[1]

என்கிறார் கம்பர்.

இந்தியரின் தலையாய கொள்கைககளில் ஒன்றுதான் சகிப்புத் தன்மை; சமரசம் அச் சமசரக் கொள்கையையே கம்பர், மேற்கூறிய பாடலில் பாடியிருக்கிறார். சைவ வைணவ சமரசத்தை வற்புறுத்துவதாக அமைந்திருப்பது அப்பாடல்; இஸ்லாமியரின் தலையாய கொள்கைகளில் ஒன்று கொடை; கொடுத்து வாழும் வாழ்வு. முகம்மது நபி அவர்களால் வற்புறுத்தப்பட்டது; சீதக்காதி மரைக்காயர், அபுல்காசிம் மரைக்காயர்-இவ்விரு வள்ளல்களின் கொடையால் உருப்பெற்றதே இச் சீறா-காவியம். கொடையாளன் புகழ், சகமெலாம் பரந்து, விசும்பின் அண்ட முகடுற நிறைவது போல் வெண்மேகங்கள், கடல் நீரை உண்டு கருமேகங்களாய் வானிடைக் குழுமின என்கிறார் உமறுப் புலவர்; அவர் பாடிய கவி வருமாறு:

"தருங்கொடை நயினார் கீர்த்தி சகமெலாம் பரந்துமிஞ்சி
நெருங்கியே விசும்பி லண்ட முகடுற நிறைந்த வேபோல்
இருங்கணி வெள்ளை மேகம் இரைபசுங் கடல்வீழ்ந் துண்டேன்
கருங்கடல் எழுந்த தென்னக் ககனிடை செழுந்து
மீண்ட" [2]



7

  1. 1. கம். பாலகாண்டம், ஆற்றுப் படலம் 216
  2. 2. சீறா விலாதத்துக் காண்டம். நாட்டுப் படலம் 1