பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101


"புன்கால் நாவல் பொதிப்புற இருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்
பல்கால் அலவன் கொண்டகோட் கசாந்து
கொள்ளா நரம்பின் சிமிரும் பூசல்
இரைதேர் நாரை எய்தி விடுவிக்கும் ”

என்பதே அப்பாடல் இது போன்ற இயற்கை நாடகம் சீறா விலும் உண்டு.

ஆற்றில் குளிக்கின்ற மகளிர், நீரில் மிதந்து வருகின்ற நாவற்கனிகளை எடுத்த உண்ணுகின்றனர். அப்போது மங்கை ஒருத்தி, வண்டினையும் கனியென்று மயங்கிக் கையில் எடுக்க, அக்காரிகை கையினின்றும் விடுவித்துக் கொண்டு வண்டு சிறகடித்துப் பறக்கின்றது. அச்சமும் மயக்கமும் அம்மங்கையை ஆட்கொள, நீரில் மிதந்துவரும் உண்மை நாவற்கனிகளையும் வண்டென்றே எண்ணி, எடுக்காமல் விட்டுவிடுகிறார்.

"மறிந்து தூங்கிய நாவலின் கணிகையோர் மங்கை
எறிந்து பார்மது கரத்தினைக் கரத்தினா லெடுப்ப
மறிந்து போதவிற் துணிக்கின்கை உதறிமெய்பதறிச்
செறிந்து சூழ்தரச் சொரிந்தமைக் கனியையும்தீண்டாள்'

என்னும் சீறாவின் பாடல் முகிழ்க்கக் காரணமாயிருந்தது மேலே எடுத்துக் காட்டிய சங்கப் பாடலே என்பது தெளிவாகும்.

சிலம்பில் இளங்கோ அடிகள், வையை ஆற்றைப் பெண்ணாக உருவகித்துக் கூறுவர். கயற்கண்களையும், அவிர் கூந்தலையும், புண்ணிய நறுமலர் ஆடையும் போர்த்து வையை மகள் திகழ்வதாக அவர் பாடுகிறார்.

"விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
உலகுபுரந் தாட்டும் உயர்பே ரொழுக்கத்துப்