பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


என்ற பாடலில் முழுமதியாய் புனிதர் முகம்மதுவை உவமித்திருக்கிறார்.

மதிமுகம் கொண்ட முகம்மதுவிற்குத்-தாலாட்ட வானிலிருந்து இறங்கி வரும் மதியே என்று பாடியிருக்கிறார். உமறு வானிலிருந்து மண்ணிற்கு இறங்கி, பிறர் அறியாதவாறு வேறுருக் கொண்டு, முகம்மது துயிலிடம் சென்று, அவருடைய மலர்த்தாளை நாள்தோறும் வருடியும், கதிர் மணித்தொட்டிலை யாட்டியும், சந்திரன் மகிழும்.

"மாமயில் அலிமா கண்துயில் காலை
முகம்மது துயிலிடம் நோக்கித்
தாமறி யாது சந்திர னிறங்கித்
தன்னுரு மாறிவேற் றுருவாய்க்
காமறு மலர்த்தாள் மெல்லென வருடிக்
கதிர்மணித் தொட்டிலை யாட்டிப்
பூமண மனைக்குள் இருந்தடி பணிந்து
போவது தினந்தொறும் தொழிலே".[1]

என்பது அப்பாடல்.

முகம்மது வாவியுள் இறங்கிக் குளித்துத் எழுதலைப் பாடும் கவிஞர், அக்காட்சி, கடலிடை நிலவு முளைத்தெழும் காட்சி போன்றுளது என்று உவமிப்பது இங்கே சுட்டத் தக்கது,

"வடிவுறு முகம்மது வாவித் தண்புனல்
இடைக்குளித் துயர்தர விலங்கும் வான்முகம்
படிமிசை ஆயிரம் கலைகொள் பான்மதி
கடலிடை முளைத்தெழும் காட்சி போன்றதே"[2]

சீறாப்புராணம் நுபுவ்வத்துக் காண்டத்தில் மதியை அழைப்பித்த படலம் என்ற ஒரு படலம் இருப்பதும், நிலவின்பால் உமறு கொண்டிருந்த ஈடுபாட்டைத் தெளி


  1. 1. சீறா. அலிமா முலையூட்டுப் படலம் 82
  2. 2. சீறா. புனல் விளையாட்டுப் படலம் 16