பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

109


வருத்தமொன் றின்மையா மதுரத் தேன்கனி
யிருத்தியாம் வளர்ப்பதற் கையமில் லையே" [1]

முகம்மது செல்லும் பாதையில், செறிந்துள்ள செடி கொடிகளும், கல்லும் மண்ணும்கூட அவருக்குச் சலாமிட்டுத் தம் வணக்கத்தைத் தெரிவிக்கின்றன.

'மல்லுயர் திண்தோள் ஆடவர் பலரும்
வன முலை மட க் கொடி யவரும்
செல்லுநன் னெறியால் வயின்வயின் செறிந்த
செடிகளும் மர ந்தலை எவையும்
கல்லுங்கற் குவையும் யாவரும் கேட்பக்
கடிதினிற் தெளியவாய் விண்டு
செல்லுயர் கவிகை முகம்மது நபிகருத்
தெரிதரச் சவாமுரைத் தனவே" [2]


காவியத் தலைவன், சாதாரண மானிடனாக இருந்தால், இவ்வாறு இயற்கை அவர்களுக்கு ஏவல் செய்வதாக எழுதுவது மரபில்லை. இறைவனே-இறைவனின் தூதுவனே காவியத் தலைவன் ஆகும் போது, அவனுக்கு இயற்கை ஏவல் செய்வதாக எழுதுவது ஒரு மரபு. கம்ப இராமாயணத்தில் காவியத் தலைவன் இராமன்; அவன் திருமாலின் அவ தாரம்: அவன் தாதை ஏவலை தலைமேற் கொண்டு, நாடு துறந்து கானகம் செல்லும் போது, மரம் செடி கொடிகள் எல்லாம் 'இராமா இராமா' என்று அரற்றுவதாகப் பாடுகிறார் கம்பர்; இராமர் போந்த பாதையும் கூட துயர் தாங்காமல் 'இராமா இராமா?’ என்று அரற்றுவதாகக் கம்பர் பாடுகிறார்.

"கிள்ளையொரு பூவை அமுத கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை அமுத வுருவறியாப்



  1. 1. சீறா. அலிமா முலையூட்டுப் படலம் 4
  2. 2. சீறா. அலிமா முலையூட்டுப் படலம் 66