பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


'மதியி னைப்பகிர் தரநபி மலைமிசை வானோர்
துதிசெ யத் தனி நின்லனர் கதிரையும் தொடர்ந்து
பதியி னிற்றரு சென்றிடிற் பகர்வதென் னெனத்தன்
இதயம் அச்சம்முற் றடைந்தபோல் அடைந்தான்இரவி" [1]

இவ்வாறு இரவி முதலாக இயற்கைச் சக்திகள் அனைத்தும் புனிதர் முகம்மதுவிற்கு ஏவல் செய்வனவாக இருத்தலை இந்நூலில் காணலாம்.

சில இயற்கை உவமைகள்

புனிதர் முகம்மதுவின் முகத்திற்கு முழுநிலவைச் சூரியனை, நட்சத்திரக் கூட்டங்களை உவமை சொல்ல விழையும் உமறு மாமனிதர் முகம்மதுவின் முகப் பொலிவிற்கு அவையெல்லாம் ஒவ்வா என்று கூறுகிறார்.

"வெங்கதிர் பரப்பி உலகெலாம் வினக்கித்
திரிதின கரணும்வெண் ணமுதம்
தங்கிய கிரணச் சகியும் அந் தரத்திற்
தவழ்தரு உடுக்குல மனைத்தும்
பொங்கொளி எவையும் சுவனநா டனைத்தும்
பூதலம் விசும்புமற் றனவும்
இங்கெழில் முகம்ம தொளிவினில் என்றால்
இவர்க்கெவை உவமைசொல் லுவதே [2]

இவ்வாறே காவியத் தலைவி கதீஜா பிராட்டியாரை உவமிக்கும் போதும்,

"தென்கடல் அமிர்தும் திக்கிற் திகழ்வரைஅமிர்தும் சூழ்ந்த
மீன்கட நடுவிற் தோன்றும் வெண்மதி அமிர்தும்துய்ய
கூன்கட வளையார் வெண்பாற் குரைகடல்அமிர்தும் சோதி
வான் கடல் அமிர்தும் ஒன்றாய் வடிவெத்தனைய பாடுவை."[3]


  1. 1. சிறா. மதியழைப்பித்த படலம் 145
  2. 2. சீறா. நபியவதாரப் படலம் 93
  3. 3. சீறா. பாதை போந்த படலம் 11