பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112


என்று அமிர்தங்கள் திரண்ட அமிர்தவல்லியாகக் கதீஜாவைக் காட்டுகிறார்.

அவ்வளவில் அமையாது கனியோடும் கதீஜாவை உவமிக்கிறார். நல்ல குலமெனும் விருக்கத்தில், உறவெனும் கிளையில் நலனுறு செல்வ மென்னும் நறுந்தழையில், பவளச் செவ்வாயாம் செம்பொற் பூவில் கவனணி நறவஞ் சிந்தும், கனியாய்த் தோன்றிய சன்னியே கதீஜா.

"குலமெனும் விருக்கம் தோன்றிக் குழுஉக்கிளைப்பணர்விட்டோங்கி
நலனுறு செல்வ மென்னும் நறுந்தழை யீன்று வண்ணச்
சிலைநுதற் பவளச் செவ்வாய் யனையெனும் செம்பொற்பூவிற்
கலனணி நறவஞ் சிந்தும் சனியினும் கனிந்த பாவை"[1]

வறுமை வெயிலால் வாடிய மானிடப் பயிர் செழிக்க, பொருளெனும் மழை பெய்தது; அம்மழையால் மறையாகிய மலர் பூத்தது. அம்மலர் அறிவினும் கனியாய்க் காய்த்தது: அக் கனியை உண்ட செழுங் கொழர்தனைய பாவையே கதீஜா என்று இன்னுமொரு பாடலில் உவமிக்கிறார் உமறு.

'வறுகலி வெயிலால் வாடு மானுடப் பயிர்கட்கெல்லாம்
பொருளெனு மாரி சிந்திப் மூவிடத் தினிது நோக்கி
அருமறை மலருட் காய்த்த அறிவெனும் சுனியை உண்ட
திருநமர் குலச்சம் சீவிச் செழங்கொழர் தனைய பூவை".[2]

இயற்கையின் வறட்சி

இறைவனே இயற்கையாய் இருந்து இருநிலத்தில் ஆட்சி செய்து வந்திருக்கிறான், இயற்கை இன்றேல் இரு


  1. 1. சீறா. பாதை போந்த படலம் 12
  2. 2. சீறா. பாதை போந்த படலம் 17