பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


என்றும், நீர்நிலை சிறப்பு. நாற்று வளர்ப்புக் காட்சிகளைக் கவினுற எடுத்துக் காட்டியுள்ளார். காய்ந்த கதிர்மணிகளை அறுத்துப் போரடித்து உழவர் ஆரவாரிக்கும் வயல்வெளிக் காட்சிகளையும் நம்மால் கண்டு மகிழ முடிகிறது இந்நூலில்.

முடிவுரை

மலை நிலங்களுக்குச் செல்லாமலே மலைவளத்தைக் கண்டோம் வயல் வெளிகளுக்குச் செல்லாமலே, பயிர்ப் பரப்பைப் பார்த்தோம்; ஆற்றோரங்களுக்குச் செல்லாமலே அவற்றின் அழகுணர்ச்சியில் திளைத்தோம்; மயிலினங்களின் "ஆடலுடன் குயிலினங்களின் கூவலையும் சுவைத்தோம்; இயற்கையாய் இவ்வுலகில் ஆட்சி செய்யும் இறைவனின் திருக்கோலத்தைக் கண்டு பரவசமுறுவோர் நிலையை இன்று நாம் அடைந்தோம்; உமறுவின் இயற்கை வருணனை சிறப்பால், சீறாப்புராணம், சீரிய புராணமாய்த் திகழ்கிறது; கற்பாரின் கண்களிலே கவின்மிகு இயற்கைக் காட்சிகளைக் காட்டி காலமெல்லாம், அவர் நெஞ்சில் மாறாத நினைவுகளாய் நிற்கிறது.