பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சீறாவில் வரலாற்றுக் குறிப்புகள்

டாக்டர், எம். எம். உவைஸ்,
எம். ஏ பி எச். டி.

இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது. வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை சுவையுடன் வருணிக்கிறது. இத்தகைய வருணனைகள் கற்பனை நயம் மிக்கனவாய் அமைகின்றன. கற்பனை உலகில் சஞ்சரிக்கின்றவன் கவிஞன் என்று காரணங்காட்டி இலக்கியத்தைப் புறக்கணிப்பவர்கள் கூட இல்லாமல் இல்லை. மெய்ம்மையான நிகழ்ச்சிகளை மூடி மறைக்கக் கூடியனவாக கற்பனை நிறைந்த இலக்கியம் அமைகின்றது என்பது உண்மையே எனினும் வருணனைகளை அகற்றிவிட்டு இலக்கியத்தை ஆராய்ந்தால் அங்கே வரலாற்று நிகழ்ச்சிகள் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம்,

ஈடிணையற்ற இலக்கியப் படைப்புக்களில் கற்பனை நிகழ்ச்சிகளும் கட்டுக் கதைகளும் கற்பனை தயத்துடன் வருணிக்கப்படுகின்றன. கற்பனையில் உருவான தனிப்பெருந் தலைவர்கள் அத்தகைய இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளனர். வரலாற்றில் காண முடியாத வீரர்கள் வருணிக்கப் படுகின்றனர், வரலாற்றில் இடம் பெறாத சம்பவங்கள் கவிதைக்கு அடிப்படையாக அமைகின்றமையைக் காணலாம். இவ்வாறு கருதப்படுவற்குரிய காரணம் அத்தகையவை வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் நிகழ்ந்திருப்பதேயாகும். வரலாற்றுக்கு உட்பட்ட, வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய சம்பவங்களையோ பெரியோர்களையோ விவரிக்கும் இலக்கியங்களில் கூட கற்பனை நயம் மிளிரக்கானலாம். வரலாற்றில் இடம் பெற்று மெய்ம்மையான சம்பவங்களையும் உண்மையிலேயே வாழ்ந்த பெரியோர்களையும் வருணிக்கும் கற்பனை நயம் மிக்க இலக்கியக் கருவூலங்கள்