பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


தமிழ் இலக்கியப் பரப்பிலே சுடர் விட்டுப் பிரகாசிப்பதைக் காணலாம். இஸ்லாமிய அடிப்படையில் கோன்றிய அத்தகைய இலக்கியப் பொக்கிஷங்சளில் ஒன்று சீறாப்புராணம் என்னும் காப்பியம்.

உண்மையிலே வாழ்ந்த, வரலாற்றில் விவரிக்கப்படும் நபிகள் நாயகம் முகம்மது (சல்) அவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது சீறாப்புராணம் உலக மக்களுக்கு முன்மாதிரியாக வாழ்ந்த தனிப்பெரும் பண்புகளைக் கொண்டு ஒழுகிய நபிகள் பெருமானாரின் வாழ்க்கைக் குறிப்புகள் சீறாப்புராணத்தில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். அண்ணல் நபி (சல்) அவர்களின் வாழ்க்கை பற்றிய குறிப்புகள் உண்மையிலேயே வரலாற்றுக் குறிப்புகள் எனக் கூறின் அது மிகையாகாது. இனி, சீறாப்புராணத் தில் இடம் பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகளைச் சுருக்கமாக ஆராய்வோம்.

உமறுப்புலவர் தமது சீறாப்புராணத்தில் நபிகள் பெருமானார் (சல்) அவர்களின் பிறந்த ஆண்டைக் குறிப்பிடுகிறார். அண்ணல் நபி (சல்) அவர்கள் கி.பி. 570இல் பிறந்தார்கள் என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும், ஆனால் சீறாப்புராணத்தில் இந்தக் கிறித் துவ ஆண்டு குறிப்பிடப்படவில்லை. உமறுப்புலவர் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் பிறந்த ஆண்டை வேறுவிதமாகக் குறிப்பிடுகின்றார். இவ்வரலாற்றுக் குறிப்பை அமைத்துப் பாடியுள்ள செய்யுளை முதலில் எடுத்துக்கொள்வோம்.

' வீசு தெண்டிரைக் கடன்மலை யடங்கவெண்குடைக்கீ
ழாசி லாதசிங் காசனத் திருந்த சிக் கந்தர்
காசி னீக்கர சியற்றுதல் கருணையின் கால
மாசி லாக்கணக் கெட்நூற் றென்பத்தோர்வருடம்" [1]


  1. 1. சீறா. நபியவதாரப் படலம் 14