பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120


ஐம்பது நாட்களிலென்றும் பலரும் பலவாறாகக் கூறுவர். எனினும் உமறுப்புலவர் அண்ணல் நபி (சல்) அவர்களின் பிறப்பு 'யானைக் கலசம் தீர்ந்த பின்னர் ஐம்பதாவது நாளில் அழகிய சந்திர மாதமாகிய 'றபீ உல் அவ்வல்' பிறை 12 திங்களிரவில் நிதழ்ந்தது என்று இவ்வாறு வருணிக்கிறார்.

"செம்மையங் கோட்டுக் கடகரிக் கலகந் தீர்ந்தபினைப்பதா நாளி
லம்மதி மாசத் தொகைதனில் றபீயுலவ் வலிற் பணிரண்டாந் தேதி
யெம்மனைக் கும்பே றெனவரும் பொருளா யிசைத் திடுந் திங்களிராவி
மும்மையென்றுரைக்கும் புவனமும் புரக்க முகம்மதுநபி பிறந்தனரே", [1]

இப்பொழுது நவீன கட்டடம் ஒன்று நூல் நிலையமாகக் காட்சி அளிக்கும் 'மெளலிதுன் நபி' என்னும் இடத்திலே தான் நபிகள் பெருமானார் பிறந்தார்கள் என்று கூறப்படுகிறது. 'ஸக்கத்துல் மெளலீது’ என அப்பொழுது அந்த இடம் அழைக்கப்பட்டது. இந்த இடத்தில் இருந்த இல்லம் அபீதாலிப் அவர்களுக்குச் சொந்தமாயிருந்தது என்றும் நபிகள் பெருமானார் ஹிஜ்றத்துச் சென்ற பின்னர் அபீதா லிப் அவர்களின் புதல்வர்களுள் ஒருவரான அகீல் அவர்கள் அதன் உரிமையாளராக இருந்தார் என்றும் கூறப்படுகிறது. சீறாப்புராணத்திலும் நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் அபீதாலிப் அவர்களின் இல்லத்திலே பிறந்தார்கள் என்றும் அவரது இல்லம் ஜெமுறத்துலுஸ்தா என்னும் இடத்தின் நடுவே அமைந்திருந்தது என்றும், அந்த இடம் மக்கமாநகரில் உள்ள புனித கஃபத்துல்லாஹ்வின் வடகிழக்குத் திசையில் இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூதலத் தரசு பதியென வுதித்த புகழ்பெரு மக்கமாநகரிற்
சீதவொண் கதிர்செர் கஃபத் துல்லாவிள்றிசையினில் வடகிழக் காக


  1. 1. சீறா நபியவதாரப் படலம் 89