பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122


-தந்தையாகிய நிலையில் இருந்தவர் அபுத்தாலிப் அவர்களின் இளைய சகோதரன் அப்துல்லா என்றும் தாங்கள் அவர்தம் புதல்வர் என்றும் கூறினார்கள். இக்கருத்துக்களே சீறாப்புரணத்தில் இவ்வாறு அமைந்துள்ளது,

"அதுனால்கிளை ஹாசீம்ேகுல மமரும்பதி மக்கம்
பிதிரா நிலை பபித்தாலிபு பின்னோரபு துல்லா
சுதனாமுகம் மது நானெனச் சொன்னார். "[1]

அண்ணல் நபி (சல்) அவர்கள் கதீஜா (றலி) அவர்களைத் திருமணம் புரிந்த நிகழ்ச்சி வருணிக்கப்படுகிறது. இங்கே அண்ணல் நபி (சல்) அவர்கள் திருமணம் புரியும்போது அவர்களுடைய வயது குறிப்பிடப்படுகிறது.அப்பொழுது அவர்களுக்கு இருபத்தைந்து ஆண்டுகளும் இரண்டு மாதமும் இரண் நாட்களும் ஆகியிருந்தன என்று குறிப்பிடப்படுகின்றது. அச்செய்யுள் வருமாறு:

"திண்டிறற் புவியில் முகம்மது தமக்குத் திருவயதிருபத்தைந் தினின்மேற்
கண்டதிங் களுமோ ரிரண்டுநா விரண்டிற் கனக நாட்டவர்கண் களிப்ப
வெண்டிசை முழுதுத் திருப்பெயர் விளங்க விருநிலமணிக்க தீ ஜாவை
வண்டுறை மரவச் செமுத்தொடை புனைந்துவரிசைமா மணம்
                                                        பொருந்தினரே."[2]

அண்ணல் நபி (சல்) அவர்களுக்கும் கதீஜா நாயகி அவர்களுக்கும் பிறந்த பிள்ளைகள் கஃபத்துல்லா வரலாற்று செய்யுட்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். ஸயினப் அம்மையாரைப் பெற்றெடுத்தமை 'பெருகுமிள மயில் கதீஜா ஸயினபெனும் பகங்கிளியைப் பெற்றா ரன்றே" என முதலாவது செய்யுளிலும் அடுத்து ருக்கையா அம்மையா ரையும் உம்முகுல்தும்


  1. 1. சீறா. ஊசாவைக் கண்ட படலம் 19
  2. 2. சீறா. மணம்புரி படலம் 117