பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124


வது தலைமுறையில் வந்த இபுறாகீம் நபி (அலை) அவர்கள் புனரமைப்புச் செய்தமையும் விவரிக்கப்படுகிறது. 10 முதல் 16 வரையுள்ள செய்யுட்களில் காலத்துக்குக் காலம் கஃபத்துல்லாவுக்கு ஏற்பட்ட இடைஞ்சல்களும் திருத்தங்களும் வருணிக்கப்படுகின்றன. பின்னர் குறைஷிகள் ஒன்று கூடி புனித கஃபாவில் பொருத்தப்பட்டிருக்கும் ஹஜறுல் அஸ்வத் என்னும் கல்லை யார் அந்த இடத்தில் வைக்கும் பாச்கியத்தைப் பெறுபவர் என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடுத்த இரண்டு செயயுட்களிலும் இந்நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. அங்கு கூடியிருந்தவர்சள் ஒரு முடிவுக்கு வந்தனர். பனி ஹாசீம் என்னும் வமிசத்தைச் சேர்ந்தவர்களும் கஃபத்துல்லாவுக்கு முதன் முதலில் வருபவரே அந்தப் புனித கல்லை உரிய இடத்தில் வைப்பதற்கு அருகதை உள்ளவர் என்று அனைவரும் ஒப்பினர். இக்கருத்துக்களையே உமறுப்புலவர் இவ்வாறு வருணிக்கிறார் கஃ பத்துல்லா வரலாற்றுப் படலத்தில் உள்ள 19 ஆம் செய்யுளில்,

"அன்ன காலையிற் செவ்விய நெறிபனி ஹாசீ
மென்னும் வங்கிடத் தொருவரிப் பள்ளியி னிடத்து
முன்ன தாகவந் தவர்நிறு வுலரென முதலோன்
பன்னு மாமறை தெளித்தவர் சிலர் பகர்ந் தனரே,"[1]

அவ்வாறு முதன் முதலில் அங்கு வந்த முகம்மது நபி (சல்) அவர்கள் தங்களது திருமேனியிலிருந்த போர்வையை எடுத்து குறைஷி மக்களுள் நான்கு தலைவரைத் தெரிந்தெடுத்து போர்வையின் நான்கு புறங்களிலும் பிடிக்கக் செய்து அந்தப் போர்வையிலே ஹஜறுல் அஸ்வத் என்னும் கல்லை வைத்து தங்கள் கைகளாலே தூக்கி அதனை உரிய இடத்தில் வைத்தார்கள். இதனால் மூள இருந்த ஒரு பெரும் போரும் தவிர்க்கப்பட்டது. பெருமானார் (சல்) அவர்கள் நடந்து கொண்ட விதத்தனையே உமறுப்புலவர் இவ்வாறு வருணித்துள்ளார்.


  1. 1.சீறா, கஃபத்துல்லா வரலாற்றுப் படலம் 19