பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125


"வெற்றி மன்னவர் தலைவரி னால்வரி விளித்துப்
பொற்ற டந்துகின் முந்தியி னான்கினும் பொருக்த
விற்று ராவகை யெடுமென விவரொடு மெடுப்பக்
குற்ற முன்றிமுற் றலத்திடை யிருத்தினர் குறித்தே."[1]

வரலாற்றுக் குறிப்புக்கள் நிறைந்த மற்றொரு படலம் நபிப்பட்டம் பெற்ற படலம். ஹிறா மலைக்குகையில் தியானத்தில் ஈடுபட்டிருந்த முகம்மது (சல்) அவர்களுக்கு அப்பொழுது முப்பத்தெட்டு வயதாக இருந்தது இதனை ஆறாறாறிரண்டு ( 2) என ஆசிரியர் இங்கு குறிப்பிடுகிறார். அச் சமயத்தில் அவர்கள் கண்களுக்கு 'வெள்ளிடையதனிற் சிறி தொளிதிரண்டு விழித்திடும் விழிக்கெதிர் தோன்றும்' என அங்கும் இங்குமாக ஒளி தோன்றியது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கூறிய உமறுப்புலவர் ஜிபுஹீல் (அலை) அவர்கள் ஹிறா மலையை அடைந்த நிகழ்ச்சியை குறிப்பிட முற்படுகிறார் அப்பொழுது நபி பெருமானாருக்கு நாற்பது வயதாகும். அந்த ஆண்டு அல்லாஹ்வின் அருளால் ஆதி பிதா ஆதம் நபி (அலை) அவர்கள் உலகில் தோன்றிய ஆறாயிரத்து ஒரு நூற்றி இருபத்து முன்றாவது ஆண்டாகும் என்றும் முகம்மது நபி (ஸல்) அவர்கள் உலகில் பிறந்து நாற்பது ஆண்டுகளாகும் என்று ஜிபுஹீல் (அலை) அவர்கள் முதன் முதலில் வந்தது றபீஉல் அவ்வல் மாதம் எட்டாந்தேதி சனிக்கிழமை இரவு என்றும் உமறுப்புலவர் இவ்வாறு கூறுகிறார்:

"துய்யவ னருளா லாத மனுவாய்த் தோன்றியவவனியின் வருட
மையவி லாறா யிரத்தினி லொருநூற் றிருபத்துமூன்றினி லழகா
வையக மதிக்கு முகம்மதின் வயது நாற்பதில் -றபீயுலவ் வலினி
லெய்திய வெட்டாந் தேதியிற் சனியி னிரவினிற்கிறாமலையிடததில்"[2]


  1. 1. சீறா. கிபத்துல்ல வரலாற்றுப் படலம் 23
  2. 2. சீறா. நபிப்பட்டம் பெற்ற படலம் 11