பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

127


நடைபெற்றது என்பதை அடுத்தடுத்த பாடல்களில் குறிப்பிடும் உமறுப்புலவர் இறுதியாக ஜிபுறீல் (அலை) அவர்கள் நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு 'இக்றவு’ என்று ஆரம்பித்து 'மாலம் யஃலம்' வரை உள்ள ஆபத்துக்களை ஓதிக் காட்டினார்கள் என்பதை இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"மிக்குயர் மறையின் வள்ளல் விளம்பவிண் ணவர்கள் கோமா
னிக்குறவு வெனும்சூ றத்தி லிருந்துநா லாயத் தின்ப
மெய்க்குற மாலம் யஃல மெனுமட்டும் விளம்புவீரென்
றொக்கலி லுயிரின் மிக்கா யுறுநபிக் குணர்த்தினாரால்." [1]

நபிப்பட்டம் பெற்ற படலத்தில் உள்ள இறுதிப் பாடல்களில் முகம்மது நபி (சல்) அவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி வறக்கத் இப்னு நவ்பல் என்னும் மூதறிஞருக்கு எடுத்துக்கூறிய விவரங்களும் அவை உண்மை என்பதற்குரிய அடையாளங்கள். இவை என்று அம்முதியவர் கூறியவையும் இடம்பெற்றுள்ளன

நபிகள் நாயகம் (சல்) அவர்களுக்கு நபிப் பட்டம் அருளப்பெற்ற பின்னர் இஸ்லாம் இரகசியமாகப் போதிக்கபட்டது. பெண்களுள் முதன் முதலில் இஸ்லாத்தைத் தழுவிய பெருமை அவர்கள் தம் பாரியாராகிய கதீஜா (றலி) அவர்களையே சாரும், அவ்வம்மையார் இஸ்லாத்தைத் தழு வியமைபற்றி,

"முல்லையங் குழற்கதீ ஜாமின் னேமுத
லில்லறத் தொடுமிசு லாத்தி லாயினார்." [2]

இவ்வாறு குறிப்பிடுகிறார் கவிஞர் உமறு. வயது முதிர்ந்தவர்களுள் இஸ்லாத்தைத் தழுவியவர் அபூபக்கர் (றலி) அவர்


  1. 1. சீறா. நபிப்பட்டம் பெற்ற படலம் 27
  2. 2. சீறா. தொழுகை வந்த வரலாற்றுப் படலம் 5