பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

133


புரிய மறைதேர்ந் தீமான் கொண் டறத்தாறொழுகும் படிகருத்திற்
கருதி யிவணி லடைந்தேனென் றுரைத்தா ருமறு கத்தாபே." [1]

இஸ்லாத்தைத் தழுவிய ஆரம்ப முஸ்லீம்களுக்கு மக்கா குறைஷியர் சொல்லொணாத் துயர் இழைத்தனர். மக்காவில் தொடர்ந்து வசிப்பது அவர்களின் உயிருக்கே ஆபத்து வந்துவிடும் போல இருந்தது. இதனை உணர்ந்த அண்ணல் நபி (சல்) அவர்கள் தமது மகள் ருக்கையா அம்மையாரையும் அவர்தம் கணவர் உதுமான் இட்னு அப்பாஸ் (றலி) அவர்களையும் அபிஸீனியா என்று வழங்கப்படும் ஹபஷா நாட்டுக்குச் செல்லும்படி பணித்தார்கள். அப்பொழுது அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு நபிப் பட்டம் அருளப்பெற்ற ஐந்தாம் ஆண்டாகும். இவர்கள் இரகசியமாகவே மக்கத்தை விட்டுப் புறப்பட்டார்கள். இது நிகழ்ந்தது றஜபு மாதத்தில் எனக் கூறப்பட்டுள்ளது இந் நிகழ்ச்சியே சீறாப்புராணத்தில் இவ்வாறு பாடப்பட்டுள்ளது.

"ஷ்ரகி றங்கிநன் னபியெனும் பெரும்பெயர்தரித்த
வருட மைந்தென வரவரு மிரஜபு மாதந்
தரும நேருது மானொடு ருக்கையா தமையு
மிருளும் போதனுப் பினர்ஹப ஷாவெனுந்தேயம்". [2]

இது முதல் ஹிஜ்றத் என வருணிக்கப்படுகிறது. சொந்த நாட்டை விட்டு வேற்று நாட்டுக்குப் பாதுகாப்புத் தேடிச் சென்ற இந்த ஹிஜ்றத் பயணத்தில் பதினைந்து நபித் தோழர்கள் பங்குபெற்றனர். அண்ணல் நபி (சல்) அவர்களின் மகளார் ருக்கையா அம்மையாருடன் வேறு மூன்று பெண்


  1. 1. சீறா. உமறு கத்தாபு ஈமான் கொண்ட படலம் 90
  2. 2. சீறா. ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போத்தபடலம் 7