பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8


சீறாப்புராணத்தில் வரலாற்று ஆசிரியதடைய பொறுப்பும் புரிகிறது; காவியப் புலவருடைய சிறப்பும் தெரிகிறது.

தம் உள்ளத்தே வரித்த இஸ்லாமிய வழிக்கும். உரைத்து வாழ்ந்த தமிழ் மொழிக்கும் கவிஞர் பெருமான் உமறு ஒருங்கே செய்த பெருஞ் சேவைக்குச் சிறந்த சான்றாக சீறாப்புராணம் விளங்குகிறது.

பேராசிரியர் பெருந்தகை, டாக்டர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார் சொல்வதுபோல, "இஸ்லாம் - தமிழ்" என்னும் இருபெரும் பண்பாடுகள் இணைந்து அளவளாவி, ஒன்றையொன்று வளர்ந்து உலகத்தையே வளர்க்க வேண்டும் என்று கவிஞர் உமறு கண்ட பெருங் கனவு சீறாப்புராணமாக வடிவெடுத்தது."

அந்தச் சீறாவைச் செந்தமிழ் அறிந்தார் சிந்தையிலெல்லாம் இடம் பெறச் செய்ய ஜனாப் மணவை முஸ்தபா அவர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி 'சிந்தைக்கினிய சீறா'வாக உருப்பெற்று உங்கள் கரரங்களில் தவழ்கிறது.

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலம் பிறந்து விட்டிருக்கிறது.

மதுரைப் பல்கலைக் கழகத்தில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்திற்கென ஓர் இருக்கை ஏற்படுத்தி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வு முனைப்புடன் நடந்து வருகிறது.

தமிழ் முஸ்லிம்களின் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தைப் படித்து ரசிக்க வேண்டுமென்ற அறிவாசை கொண்டவர்களுக்குக் கிடைக்கிற அமுதக் கலசம் போல 'சிந்தைக்கினிய சீறா' அமைந்து விட்டிருக்கிறது.

நம்முடைய காலத்தில், நாச்சிகுளத்தாரின் அரிய முயற்சியால் சீறாவுக்கான புதிய பதிப்பு, வெளிவந்ததைத் தொடர்த்து கடந்த 1975இல் இளையாங்குடி டாக்டர் ஜாதீர் ஹுஸைன் கல்லூரியினர் சீறாவின் பெயரால் கருத்தரங்கு நடத்தி, மலர் வெளியிட்டனர், அந்நறுமண மலரின் 14 இதழ்களின் தொகுப்பு மதுரைப் பல்கலை