பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134


களும் அவ்வம்மையாரின் கணவரான உதுமான் (றலி) அவர்ளுடன் வேறு பத்து ஆண்களும் மக்காவிலிருந்து அபிஸினி யாவுக்கு ஹிஜ்றத் சென்றனர். இந்த வரலாற்று நிகழ்ச்சி சீறாப்புராணத்தில் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.

"திருந்துந் திண்புய நபிதிரு மகளுடன் சிறப்ப
விரிந்த பூங்குழன் மடந்தையர் மூவரும் வியப்பப்
பொருந்தந் தீனதர் பதின்மரும் புசழுது மானும்
பிரிந்தி டாதுசென் ற ந்தநா டடைந்த பின்னர்,"[1]

இதே படலத்திலுள்ள வது செய்யுளில் இப்பயணத்தில் பங்கு பற்றிய ஜஃபறிப்னு அபுதாலிப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

'அமுல் ஹூஸூன்' என்றால் துக்ககரமான ஆண்டு’ என்பது பொருள். நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கையிலும் இத்தகைய துக்ககர மான ஓர் ஆண்டு ஏற்பட்டுள்ளது என வரலாறு கூறுகின்றது. அந்த ஆண்டிலே தான் அண்ணல் நபி (சல்) அவர்களின் பெரிய தந்தையும் பாதுகாவலருமான அபுதாலிப் அவர்கள் இவ்வுலகை விட்டு பிரிந்தார்கள். அவருடைய இறப்பை,

"இரைப்பெ ருங்கட லெனவினஞ் சூழ்தர விறந்தார்
மரைப்ப தத்தபித் தாலியென் றழகுறும் வள்ளல்"[2]

என விவரிக்கிறது சீறாப்புராணம். இது வரலாற்று முக்கியத்துவம் பொருந்திய நிகழ்ச்சி என்பதனால் இச்சம்பவம் நிகழ்ந்த நாளை நுணுக்கமாகக் குறிப்பிடுகிறார், உமறுப்புலவர். அண்ணல் நபி (சல்) அவர்களுக்கு நபிப்பட்டம் அருளப் பெற்று பத்து வருடங்களும் எட்டு மாதங்களும் பதினொரு நாட்களும் கழிந்த பின்னரே அபுதாலிப் அவர்கள் உயிர் நீததார்கள் என இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது.


  1. 1. சீறா. ஈமான் கொண்டவர்கள் ஹபஷா ராச்சியத்துக்குப் போந்த
    படலம் 3
  2. 2. சீறா. பிராட்டியார் பொன்னுலகு புக்க படலம் 7