பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140


கள் உறவு முறையில் நபிகள் பெருமானாரின் தாய்மாமன்மாரைச் சேர்ந்தவர்கள். மதீனாவிலே ஒரு காணி நிலம் வாங்கத் திட்டமிட்டார்கள் நபிகள் பெருமானார் (சல்) அவர்கள். நிலத்தை விலைக்கு வாங்க வேண்டும் என்றார்கள். பனீ நஜ்ஜாறுகளோ 'நிலத்தைத் தருகிறோம், பொருள் பெற மாட்டோம்' என்றனர். ஆனால் அபூபக்ர் (றலி) அவர்கள் விலைக்கே விற்கப்படல் வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். இச்சம்பவம் இவ்வாறு வருணிக்கப்பட்டுள்ளது.

"மதிமுகம் மதுதா யாமினாக் குரிய
மாதுலர் பனீ நச்சாறு களின்
முதியரை யழைத்திந் நிலம் விலைப்படுத்தித்
தருகென மொழிதலு மெவர்க்கும்
புதியவ னெமக்கு விலைகொடுத் தருள்வ
னும்மிடம் பொருள் கொளோ மென்ன
விதமொடு முரைப்ப வவர் தமக் கெதிரி
பூைபக்க ரினிதெடுத் துரைப்பார்."[1]

நிலத்திற்கான விலை முடிவு செய்யப்பட்டது. பத்துப் பொற்காசுகள் என அந்நிலத்தின் விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பத்து வெண் பொற்காககளையும் அபூபக்ர் (றலி) அவர்கள் வழங்கி நிலத்தை வாங்கி நபிகளார் (சல்) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். அங்கே ஒரு பள்ளியை யும் வீட்டையும் கட்டுவதற்குத் திட்டம் வகுக்கப்பட்டது. அவ்வாறு கட்டி முடிக்குமளவும் அண்ணல் நபி (சல்) அவர்கள் ஏறிவந்த ஒட்டகம் சுயமாகவே நின்ற இடத்தின் சொந்தக்காரரான அபூ அய்யூப் அள்லாரி அவர்களின் இல்லத்திலே தங்கி இருந்தார்கள். இந்த வரலாற்று முக்கியத்து வம் வாய்ந்த நிகழ்ச்சியே இவ்வாறு வருணிக்கப்பட்டுள் ளது.

"தங்கமோ ரீரைந் தளித்தபூ பக்கர்
வாங்கிய தலத்தினை யினிதின்


  1. 1. சீறா. விருந்திட்டு ஈமான் கொள்வித்த படலம் 1