பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9


கழகத்தில் பாட நூலாக ஏற்றுக் கொள்ளப்படும் சிறப்பினையும் பெற்றது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும் நல்ல சுவையறிஞருமான ஜனாப் மணவை முஸ்தபா அவர்கள், தன்னந்தனியாக முன்னின்று சீறாவின் பெயரால் சென்னை மாநகரில் கருத்தரங்கு நடத்தினார்.

தக்கவர்களும், தகுதி மிக்கவர்களுமான பத்துப் போறிஞர்கள் அக்கருத்தரங்கில், வழங்கிய கருவூலங்கள் அறிவுப் பெட்டகமாக 'சிந்தைத்தினிய சீறா' பெயர் பெற்று, இந்நூலாக உருப்பெற்றிருக்கிறது.

சீறாவின் சிறப்பைப் பல்வேறு கோணங்களில் சுவைத்தேர்ச்சிமிக்க அறிஞர் பெருமக்கள் திறனாய்வு செய்து வெளியிட்டுள்ள தன்மை வியந்து பாராட்டக்கத்கதாக அமைந்திருக்கிறது.

நானூறுக்கு மேற்பட்ட பக்கங்கள் கொண்ட இந்நூலில் நூற்றுக்கு மேற்பட்ட பச்கங்களில் கலாநிதி அல்ஹாஜ் உவைஸ் அவர்களின் இரு எழுத்தோவியங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

கலாநிதி அவர்கள் சீறாவில் உள்ள வரலாற்றுக்குறிப்புகளை எடுத்துக்காட்டும் முறையும். அதிலுள்ள பாரசீகச் சொற்களை விளக்கிக் காட்டும் விதமும், அவர் ஓர் தமிழ் அறிஞர் மட்டுமல்ல. இஸ்லாமிய மொழியில் மேதையுமாவார் என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன.

'உமறுப் புலவரின் இலக்கியத் திறனைக் கூறவந்த பேராசிரியர் அறவாணர். "காவியத்தில் பரவிக் கிடக்கும் அரபு, பாரசீக சொற்கள் சுவைஞனின் பார்வையில் சுமை தான் எனினும், மேலே அழுத்தமான தோல் இருக்கிறத என்பதற்காக பலாப்பழத்தை விட்டுவிடுகிறோமா? பல்லை உடைக்கும் கணுக்கள் இருக்கின்றனவே என்பதற்காக கரும்பை விரும்பாதவர் உண்டா?...." என்று கேட்டு