பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

145


றிறையவ னருளி னாயத் திறங்கிய தெவர்ச்கு
மன்றே".[1]

றமளான் 17ஆம் நாள் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுக்கும் மக்கத்தைச் சேர்ந்த குறைஷிக் காபிர்களுக்கும் இடையே போர் மூண்டது. இஸ்லாத் தின் வரலாற்றிலே முதலாவது போர் என இது கணிக்கப்படுகிறது. இப்போர் கற்பனை நயத்துடன் சீறாப்புராணத்தில் உள்ள பதுறுப் பட லத்தில் விரிவாக வருணிக்கப்படுகிறது. முஸ்லிம்களின் சார்பில் பதுறுப்போரில் பங்கு கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கையை உமறுப்புலவர் இவ்வாறு ஒரு செய்யுளில் குறிப்பிடுகிறார்,

இயன்மறை தெரிமு ஹாஜி ரீன்களெண் பத்துமூன்று
பெயருமன் சாரி மாரிற் பேர்பெறுந் தலைமைமிக்கோ
ருயரிரு நூற்று முட்பத் தொருபெயர வருங் கைவா
ளயருறா வெற்றி வீரத் தவருட னீண்டி னாரால்".[2]

இங்கே பதுறுப் போரில் பங்கு கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை வகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளது. பதுறுப் போரிலே மக்கமா நகரிலிருந்து வந்து பங்கு கொண்ட முஹாஜிரீன்களின் எண்ணிக்கை 83 என்றும் மதீனா மாநகரைச் சேர்ந்த அன்சாரிகளின் தொகை 31 என்றும் ஒவ்வொருவரும் ஒரு கைவாளுடனே வந்திருந்தனர் என்றும் இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. பதுறுப்படலத்தில் உள்ள மற்றொரு செய்யுளில் பதுறுப் போரில் பங்கு கொண்ட முஸ்லிம்களின் மொத்த எண்ணுக்கை 314 என்று 'பதுறி லடர்ந்த முந்நூற்றுடன் பதினான்கு இதமுறுந் தலைவர்க் கும்பர்மா ராயமுண்டு...' (பதுறுப்படலம் 245) குறிப்பிடப்பட்டுள்ளதும் கண்டு நோக்கற்பாலது. இப்போரில் பங்கு




1 Ս

  1. 1. சீறா. பதுறுப் படலம் 1
  2. 2. சீறா. பதுறுப் படலம் 13