பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146


கொண்ட குறைஷிக் காபிர்களின் எண்ணிக்கை ஆயிரம் என்று 'அந்நக ரறபிக் சாபி ராயிரம் பெயாகள் (55) என இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படலத்தில் உள்ள 204 வது செய்யுளில் ஒரு பிடி மண் எடுத்து எதிரிகளின் பக்கம் அண்ணல் நபி (சல்) வீசிய நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இந்த பதுறுப் போரிலே குறைஷிக் காபிர்சளுள் 70 பேர் சிறைபிடிக்கப்பட்டனர் என்பதை "...எதிர்ந்த தலைமை மன் னவரி னெழுபது பெயரினை... பிடித்தனர் மாதோ' (21) எனவும் அவ்வாறு பிடிபட்டவர்களை ...... முகம்மதின் பிதா பின் னான அப்பாசையு...... அபித்தா லிபுதரு மலிமுன் வந்த வுக் கயிலையும்......ஆரிதரு திருச் சேய் நெளபலென்பவனையும்......” (212) எனவும் முஸ்லிம்களுள் விண்ணுலகெய்தியோர்...' இறந்த தீனவர் பதினான் கமருறுந் தலைவர்..." (213) எனவும் கைப்பற்றப்பட்ட யுத்தக் கைதிகள் ஒவ்வொருவரும் நாலாயிரம் பொற்காசுகள் செலுத்தித் தத்தம் தாயகம் திரும்பினர் என்பதை 'உறுதலை விலைநாலாயிரத் திருகம் மொவ்வொரு வருக்கினி தளித்து...' (252) எனவும் விவரிக்கப்பட்டுள்ளது. பதுறுப் போரிலே பங்கு கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 313 என்று பல இடங்களில் கூறப்படுகின்றன. சிறைக் கைதிகளிடமிருந்து ஆயிரம் முதல் நாலாயிரம் தீனார் வரை பெறப்பட்டதாகவும் கூறுவர். இவ்வாறு றமலான் மாதம் முடிவாகும் பொழுது நபிகள் பெருமானார் (சல்) அவர்களுக்குப் பித்றா பறுலாக்கப் பட்டது என்னும் திருக்குர் ஆன் ஆயத்தும் இறங்கியது என்பதை,

"முதலவன் விதித்த விறமலா னோன்பு
   முடிவினி லியாவரு மறிய
அதிசயம் பிறப்பப் பித்துறாப் பறுலென்
   றாயத்தும் நபிக்கிறங் கியதான் ...".[1]

எனக் குறிப்பிட்டுள்ளார் உமறுப்புலவர். பணஞ் செலுத்த முடியாத கைதிகளைக் கொண்டு படிப்பு வாசனையற்றவர்


  1. 1 சீறா. பதுறுப்படலம் 25