பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147


சளுக்குக் கற்பித்துக் கொடுக்கச் செய்த அத்தகையோருக்கும் விடுதலை அளிக்கப்பட்டது என்ற செய்தி சீறாப்புராணத்தில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படையான மூல மந்திரமான கலிமாவை விதைத்த மக்கமா நகரிலிருந்து மதீன மாநகர் வந்து அப்பொழுது மூன்றாம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இவ்வாறு மூன்றாம் ஆண்டு நிகழ்வதை உமறுப்புலவர்,

  • மருந்தெ னுங்கலி மாவுரை விதைத்துமக் காவி


லிருந்து மாமதீ னாவிடத் திணிதெழுந் தருளித்

திருந்த வாண்டொரு மூன்றினில்........."[1]

எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஹிஜ்றி மூன்றாம் ஆண்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில சம்பவங்களை உமறுப்புலவர் இங்கு குறிப்பிடுகின்றார். இங்கே றசூல் நாயகம் (சல்) அவர்களுடைய வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புடைய சில விவரங்களை வருணிக்கிறார். அசனார் பிறந்த படலத்தில் இந்த விவரங்கள் இடம் பெறுகின்றன. '...... குலவு நீள்புக ழுமறுகத் தாபெனுங் குரிசில்' (2) என்று வருணிக்கம் பட்டுள்ள உமறு கத்தாப் (றலி) அவர்களின் புதல்வியான

"அருந்த வத்தினி லீன்றெடுத் துவந்தபெண்ணரசைக

கருந்த டங்கயற் கண்ணியை நறு மொழிக் கணியை

வருந்து மெல்லிழைக் கொடியைமென் பிடிநடை மயிலைப்

பொருந்து மாரமு தையபு சாவெனும் பூவை". [2]

'குறைஷி யங்குலக் காவினி லுறைந்தகோ குலத்தைப

பொறையு நீதியு மொழுக்கமும் விளைத்தபொன் னிலததை


  1. 1.சீறா. அசனார் பிறந்த படலம் 1
  2. 2.சீறா. அசனார் பிறந்த படலம் 3