பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151


உகுதுப் போரிலே வீரமரணம் எய்திய முஸ்லிம்களின் தொகை 85 என்பதை உமறுப்புலவர் 'அறுபத்தைத்து' 264 எனக் குறிப்பிடுகிறார்.

அடுத்து ஹிஜ்றி நான்காம் ஆண்டில் நிகழ்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள் விவரிக்கப் படுகின்றன. இந்த ஆண்டிலே தான் 'கஸ்றுத் தொழுகை முஸ்லிம்களுக்கு விதியாக்கப்பட்டது கஸ்றுத் தொழுகையைப் பறுலானதாக்கும் இறை வசனம் இறங்கியது. இஸ்லாமிய சன்மார்க்கத்தில் விலக்கப்படாத பிரயாணத்தில் ஈடுபடுவோர் அதாவது ஏறத்தாழ 80 மைல் தூரப் பயணத்தில் ஈடுபடுவோர் . 'அதாவாக' இருந்தாலுமோ 'களாவா' இருந்தாலுமோ நான்கு றக்க ஆத்துள்ள பறுளுத் தொழுகையை இரண்டு றக்க ஆத்துக்களாகச் சுருக்கித் தொழலாம் இத்தகைய தொழுகையே கஸ்றுத் தொழுகை என அழைக்கப்படுகிறது. ஹிஜ்றி நான்காம் ஆண்டில் கஸ்றுத் தொழுகை முஸ்லிம்களுக்குப் பறுளாக்கப்பட்ட தென்னும் இறைமறை வசனம் இறங்கிற்று என்று உமறுப் புலவர்.

"வநத தெண்ணிய கிஜூறத்து நான் கெனும்வருடஞ்
சிந்தை கூர்தரக் கசறெனுந் தொழுகையைச் செய்த
லெந்த நாட்டினு மேகுவோர் மேல்பறு லென்ன
வந்த மில்லவ னாரண மிரங்கின வன்றே"[1]

இவ்வாறு கூறுகிறார். அதே ஆண்டில் அபூ உமையா அவர்களின் புதல்வி உம்மு ஸல்மா (றலி) அவர்களை அண்ணல் நபி (சல்) அவர்கள் திருமணம் புரிந்தார்கள். இதனையே உமறுப்புலவர், "......... அபூ உமையா, பேறி னால் வரும் பேதைய ரும்மூசல் மாவை........., ஈறிலானபி திருமணம் முடித்தனர்.........' (உசைனார் பிறந்த படலம் 2) என


  1. 1. சீறா. உசைனார் பிறந்த படலம் 1