பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152


வருணித்துள்ளார். உசைன் (றலி) அவர்களின் பிறப்பு அடுத்து வருணிச்கப்படுகின்றது, அதே ஆண்டு சஹபான் மாதம் ஐந்தாம் நாள் உசைன் (றவி) அவர்கள் பிறந்தமை இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.

'பின்னு மவ்வரு டஞ்சகு பானெனப் பேசு
மன்ன திங்களிற் றேதியோ ரைந்தினி லழகார்
மின்னு பூனணி பாத்திமா வயிற்றினில்விளங்கி
யுன்னு காரணத் துடனுசை னார்நிலத்துதித்தார்." [1]


இந்தப் படலத்தில் உள்ள 7 ஆம், 8 ஆம் செய்யுட்களில் அபு தாலிப் அவர்களின் அருமை மனைவியார், அண்ணல் நபி (சல்) அவர்களை நாள்தோறும் வளர்த்த தாய்க்குப் பதில் தாயாக இருந்த பாத்திமா அம்மையார் அவர்களின் மறைவு பற்றிக் குறிப்பிடப்படுகிறது. 17 ஆம் பாடலில் இவ் வம்மையாரின் புதல்வர்களினதும் புதல்வியர்களினதும் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

வாஷிங்டன் இர்வின் (Washington Irwin) என்னும் வரலாற்று ஆசிரியர் நபிகள் நாயகம் (சல்) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். தாதுர் என்னும் காட்டிறபிக்கும் அண்ணல் நபி (சல்) அவர்களுக்கும் இடையே நடந்த சம் பவத்தையே அவர் அவ்வாறு புகழ்ந்து எழுதியுள்ளார். நபிகள் பெருமானார் அவர்களுக்கு அல்லாஹூத் த ஆலா மீதிருந்த அளப்பரிய நம்பிக்கை மிக்க அபாயகரமான சந்தர்ப்பத்திலும் கூட அவர்களுக்குப் பேருதவியாக இருந்தது என்பதைத் தெள்ளிதிற் புலப்படுத்திக் கொண்டிருக்கிறது அச்சம்பவம். கதபான் வெற்றிக்குப் பின்னர் முகம்மது நபி (சல்) அவர்களும் தோழர்களும் திரும்பி வந்து கொண்டிருந்தனர். பாலையைக் கடந்து ஒரு காட்டினில் தங்கினார்கள்.


  1. 1. சீறா உசைனார் பிறந்த படலம் 3