பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/162

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156


ஒன்பது மிஸ்கால் தங்கம் தந்து 'உமதுடன் மீளுதி யென்றார் தாபித் (றலி) அவர்கள். (47) இந்தச் சொல்லைக் சேட்டதும் ஜுவைறியா (றலி) அம்மையார் நபி திருமுன்னரின் வந்தாள்' (48) வந்து தான் தாபித் என்பவரின் சிறைக் கைதி என்றும் அவர் 'தலை விலை ஈந்து நீ போ' எனக் கூறினார் என்றும் ஆதலினால் இங்கே வந்ததாகவும் ஹயிறாக இருக்கும் என்றும் அதற்கான பொருள் தறுமாறும் கேட்டார். இக் கருத்துக்களையே உமறுப்புலவர் இவ்வாறு கூறுகிறார்.

"தீனோர்களில் தாபித் தெனுந் திறன் மன்னவர்சார்பி
லானேன் றலை விலையீந்தினி நீபோகென வறைந்தார்
வானுர்மதி யலையீர்மன மகிழ்ந்தேகயி றாக
யானேயிவ ணடைந்தேன் சில பொருளீகுமினையா"[1]

அண்ணல் நபி (சல்) அவர்களும் அவ்வாறே பொருளை ஈந்து ஜூவைறியா (றலி) அம்மையாரை விடுதலை செய்வதற்கான வழி கோலினார்கள். அவ்வம்மையாரே விடுதலை பெற்றுத் தமது தந்தையாருடன் செல்ல மறுத்து தாம் றசூலுல்லாஹ்வின் சமூகத்திலேயே வாழ விரும்புவதாகக் கூறினார்கள். அவர் தம் விருப்பப்படி அடிமையாக பிடிக்கப்பட்டு விடுதலை பெற்ற ஜூவைறியா (றலி) அம்மையாரைத் திருமணம் புரிந்தார்கள். இதனை அறிந்த ஏனையோரும் தத்தம் அடிமைகளை விடுதலை செய்தனர் என்று உமறுப்புலவர் இவ்வாறு பாடுகிறார்.

"மட்டார்தொடைப் புயத்தாரிது மகளார்ஜூவை றாவை
யொட்டாதரும் புகழ் மாநபி மணமெய்தலுமெவருங்
கட்டாம்படி சிறையவையுங் கடிதின் பயனுரிமை
விட்டாரிவர் நகர்மேவிய சுற்றம்மெனும் விருப்பால்" [2]


  1. 1. சீறா. முறைக்குப் படலம் 51
  2. 2. சீறா. முறைக்குப் படலம் 60