பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

159


டுள்ளது. அகழ்ப் போரில் ஏற்பட்ட தோல்வி இவ்வாறு வருணிச்சப்பட்டுள்ளது.

"கங்கு தப்பிய கத்துபான் குழுவுங்ம னானாச்
சங்க முப்பெரும் படைக்கட லசத்தெனுஞ் சவையும்
பங்க மெய் திடும் பனீகுறை லாவெனும் படையு
மங்கி ருந்தில சிதன வோடின வன்றே". [1]

இச் செய்யுளிலும் வெவ்வேறு கோத்திரங்கள் வெவ்வேறு அடைமொழிகளால் வருணிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் போர் மதீனாவின் முற்றுகை 37 நாட்கள் நடை பெற்றது என்று வரலாறு கருதுகிறது. ஆனால் உமறுப்புலவரோ தமது சீறாப்புராணத்தில் அகழ்ப்போர் நடைபெற்ற கால எல்லையை இருபதுநாலும் சொச்சமும் எனக் குறிப்பிட்டுள்ளார். 'இணைய மன்னர் விருபதுஞ் சின்னமு மிருந்து மனமு ழன்றகம் வெருவியோ டினர்"...

இச்செய்யுளில் "சின்னம்’ என்னும் சொல் 'சொச்சம்' என்னும் பொருளில் உபயோகிக்கப்பட்டுள்ளது,

ஹிஜ்றி நான்கு ஆண்டுகள் நிறைவு பெற்று ஐந்தாம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருந்த லுமாம் ஈமான் கொண்ட படலத்தில் இச்செய்தி '... விலக்கரிய வருடமொரு நான்கு நிறைந் தைந்தாண்டு மேவும் போதில்...’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆண்டும் இஸ்லாமிய வரலாற்றிலே முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகள் நடந்தேறியுள்ளன. உலகில் உள்ள முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய கடமைகளுள் ஐந்தாவதான ஹஜ் கடமை விதியாக்கப்பட்டுள்ளது '...அவனி மீதிற் றுலக்கமுற வந்த ஹஜ்ஜு பறுலான தின்று முதற்றொழுவி ரென்றே.'

இருதயத்தின் இடத்துள்ள அறிவை நீக்குதல் அருமையானது. அத்தகைய அறிவையும் அகலச் செய்ய வல்லது


  1. 1. சீறா. உயை வந்த படலம் 181