பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164


பெருமானாரும் கூட்டத்தினரும் அங்கு வந்ததைச் சந்தேகக் கண்கொண்டு நோக்கிய மக்காக் குறைஷிக் காபிர்கள் ஆளுக்கு மேல் ஆளனுப்பிப் பார்த்தார்கள். இக்கூட்டத் திடீர் உம்றா செய்யவே வந்துள்ளனர் என்று அனைவரும் திருப்தி அடைந்தனர் இறுதியாக சொற்பயின் மதியான் மிக்க சுகயிலென் றோருவன் வந்தான்' நபிகள் பெருமானார் (சல்) அவர்கள் சுயில் என்னும் பெயருக்குக் கொடுத்த கருத்து இலேசு என்பதும் இங்கு, "பதித்திவ னாம சாரம் பார்த்திடி லேசாம்..." (76) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு சுகயில் என்னும் பலத்தின் பொருளை முகம்மது நபி (சல்) அவர்கள் ஆராய்ந்து சொல்ல அற்புதமான நபிகள் பெருமானாரை நோக்கி சுகயில் ஒன்று கூறினார் எங்கள் இருசாராருக்கும் இடையில் மற்பனமாக -விந்தையாகச் செய்ய வேண்டிய கருமங்களுக்கு எல்லாம் உற்பனமாக- நன் நிமித்தமாகச் செய்ய வேண்டியது ஒன்று உண்டு' என்றான். அதாவது இரு சாராருக்கும் இடையே ஒரு சீட்டு - எழுதப்பட வேண்டும் என்று கூறினான். இக்கருத்துக்களே,

"சொற்பொருண் முகம்ம தாய்ந்து சொல்லிடசுலயி லென்போ
னற்புதர் தம்மை நோக்கி யறைகுவ னிருவ ருக்கும்
விற்ப னமாகச் செய்ய வேண்டுகா ரியங்கட்கெல்லா
முற்பன மாகச் சீட்டொன் றெழுதுத லுறுதி யென்றான்."[1]

எனச் சீறாப்புராணத்திலே இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இதற்கினங்கினார்கள் உம்மி நபி (சல்) அவர்கள். அலி (றல்) அவர்களை அழைத்துச் 'சீட்டினை எழுதும்படி பணித்தார்கள். ‘ஏமநற் புகழீர் சீட்டி லெழுதுவக் கணையே தென்றார்" (78) இது அலி (றலி) அவர்கள் எழுப்


  1. 1. சீறா. உமுறாவுக்குப்போன படலம் 77