பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

165


பிய கேள்வியாகும். வக்கனை என்பது கடிதம், சீட்டு முதலியவற்றின் முகப்பில் எழுதும் வாசகச்தைக் குறிக்கிறது. வச்சனை எவ்வாறு எழுதப்படல் வேண்டும் எனக் கேட்டதற்கு அண்ணல் றசூல் (சல்) அவர்கள் "பிசுமில்’ லாகிற் றகுமா னிற்ற கீம்' என எழுதுமாறு பணித்தார்கள் இதனைக் கேட்ட சுகயில் என்பவன் 'பிஸ்மில்’ என்பதன் தாத்பரியம் தனக்குத் தெரியும் என்றும் 'அற்றஹ்மா னிற்ற ஹீம்' என்பதனைப் பற்றி நான் இதற்கு முன்னர் கேட்டதில்லை என்றும் சுகயில் கூறினான். இதனைக் கேட்டதும் அண்ணல் நபி (சல்) அவர்கள் தொடர்ந்து கூறினார்கள். இக் கருத்துக்கள் இரண்டு செய்யுட்களில் இவ்வாறு அமைந்துள்ளன.

"இன்புறும் பிசுமில் லாகிற் றகுமா னிற்றகீமென்
றன்புறு முதலிற் கோட்டென் றகுமது வந்துகூற
முன்புறு சுகைலென் போனு மொழிகுவன் லாவின்
றன் பெயர் நடக்கும் வண்ண மறிகுவந் தரணிமீதில்."

"அற்றகுமா னிற்றகீ மென்ன வறைகின்றவார்த்தை யாங்க
டிறனுறக் கேட்ட தில்லை யம்மொழி தீட்டவேண்டா
நிறைபுகழுடையீர் ரென்று சுகைலினிதியம்பக் கேட்டு
பறைபயி லிறசூலுல்லா மகிழ்ந்தொருவசனஞ் சொல்வார்."[1]

சீட்டின் அடுத்த வசனமாக,

'சொல்லிய விறையா மல்லா தூதரா முகம்மதென்றுங்
கல்வி சீருடைய வள்ளல் கவுல் கொடுத்திட்ட வாறென்’

(18)



  1. 1. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 79-80