பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166


அதாவத 'இறைவன் அல்லாஹ் ஒருவனே; அவன் திருத்துாதர் முகம்மது' என்று எழுதம்படி கூறினார்கள். இதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தான் சுகயில், 'உங்களை அல்லாஹ்வின் றசூல் என்று ஏற்றுக்கொண்டோமேயானால் இந்தப் பகைமை எதுவுமே ஏற்பட்டிராதே' என்று பதில் அளித்த சுகயில் அவ்வாறு எழுதுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தான். கவுல் என்னும் சொல் உடன்படிக்கையைக் குறிக்கின்றது. இதனையே ஒரு செய்புளின் முதலிரண்டு அடிகளில் கவிஞர்,

"ஆதிதன் றூத ரென்ன வும்மையா மறிந்தோமாகில்
வேதனைப் படுவ துண்டோ பகைசில விளைவதுண்டோ." (82)

எனக் குறிப்பிட்டுள்ளார். இச் சொற்றொடரை ஏற்க மறுத்ததனால் நபிகள் பெருமானாரும் அதனை மாற்றும்படி உத்தரவிட்டார்கள். மாற்றி அந்தச் சொற்றொடைரை நீக்கி சமாதானத்தையே நாடியவர்களாய் அதற்கு மாறாக அப்துல்லா மகன் முகம்மது அன்போடு கொடுத்த இணக்கத்துக்கிணங்க இம்முறை உம்றா நிறைவேற்ற மக்காக் குறைஷியர்கள் வழிவிடவேண்டும்' என்று எழுதுமாறு பணித்தமையை உமறுப்புலவர்,

"அரியதோர் புகழ்சேர் வண்மை யப்துல்லாமுகம்ம தென்போர்
பரிவோடு கவுல்தா மீந்த படியுமு றாச்செய்தேக
வரிசையாய் மக்கத் துள்ளோர் வழிவிடக்கடவ தென்று
தெரிவுறத் தீட்டு கென்றார் சுகயில்பின் சிறிதுசொல்வான்."[1]


  1. 1. சீறா. உமுறாவுக்குப் போன படலம் 83