பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

173


அவர்கள் வபாத்தானது இந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது நபிகள் பெருமானாரின் மதீனா வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளுள் ஏறத்தாழ சரி பாதி கால நிகழ்ச்சிகளே சீறாப்புராணத்தில் இறுதிக் காண்டமான ஹிஜ்றத் காண்டத்தில் இடம்பெற்றுள்ளமையைக் காணலா ம். ஆறாண்டுக்கால வரலாற்று நிகழ்ச்சி சீறாப்புராணத்தில் 47 படலங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஹிஜ்றத்துக்கு முந்திய நபிகள் பிரானின் வாழ்க்கை சீறாப்புராணத்தில் 45 படலங்களிலே விவரிக்கப்பம் ஈண்டு நோக்கற்பாதுை. எனவே, நபிகள் பெருமானாரின் இறுதி ஐந்து அல்லது ஆறு ஆண்டு வாழ்க்கையை வருணிக்க உமறுப்புலவர் மேலும் நாற்பதுக்கு மேற்பட்ட படலங்களைப் பயன்படுத்தி இருத்தல் வேண்டும். ஏனெனில் நபிகள் நாதரின் வாழ்க்கையில் இறுதி ஐந்து ஆறு ஆண்டுகளில் வரலாற்று முக்கிபத்துவம் வாய்ந்த பல நிகழ்ச்சிகள் நிகழ்ந் துள்ளன.நபிகள் நாயகத்தின் இறுதி ஐந்து ஆறு ஆண்டுகளில் நடைபெற்ற வரலாற்றுச் சம்பவங்கள் சீறாப்புராணத்தில் இடம்பெறாமைக்குரிய காரணம் இவற்றை வருணிக்க முயல்வதற்கு முன்னரே உமறுப்புலவர் இறையடி சேர்ந்துள்ளார் என்பதேயாகும். வாய்ப்புக்கிட்டி இருந்தால் நிச்சயமாக உமறுப்புலவர் நபிகள் பெருமானார்(சல்) அவர்களின் வபாத்து உட்பட வரலாற்று முக்கியத்துவம் பல சம்பவங்களை வருணித்திருப்பார். அத்தோடு சீறாப் புராணத்தையும் பூரணத்துவம் பெற்ற தொன்றாக அமைத்திருப்பார்.

எனவே இதுகாறும் கூறியவற்றிலிருந்து புரிந்து கொள்வது? உமறுப்புலவர் தமது சீறாப்புராணத்தில் நபிகள் பெருமானார் (சல்) அவர்களின் வாழ்க்கையோடு நெருங்கிப் பின்னப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல நிகழ்ச்சிகளை மிக நுணுக்கமாக வருணித்துள்ளார். அவற் றைச் சொற்சுவை மிக்கனவாய்ப் பாடியுள்ளார்.