பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180


கருவிழிக் கனிமொழித்

துவர் வாய்

பொலங்கொடி யாமினா

மணி மனை 5: 1 | 8 மடந்தை யாமினா மனை 7: 90,

ஆண்களில் அழகுமிக்கவர் அன்புடையவர் அப்துல்லா. பெண்களில் எழில்மிக்கவர் ஆமினா. அப்துல்லாவை விரும்பி மணம் செய்து கொள்ள வந்த செல்வப் பெண்டிர் பலர், ஆமினாவின் அழகை விரும்பி அவளை மணக்க முன் வந்தவர் பல செல்வந்தர்கள். இறையருளாலே 'சினவு வேற்கரத் தப்துலா வெனுமொரு சிங்கத்தை ஆமினா வெனுங்குல மடமான்’ மணம் செய்து கொண்ட செய்தியை,

'எனக்கு னக்கென மடந்தையர் மணத்தினுக்

கிகலத் தனக்கு நேரிலா லாமினா னெழுதிய படிதனி

முடிந்து வணக்க ருங்குழ லாமினா வெனுமட மானைச் சினக்கும் வேற்கரத் தப்துல்லா மணத்

தொடுஞ் சேர்ந்தார். 1

என்று கவிதை நயஞ் சிறக்கப் பாடுகின்றார் உமறுப்புலவர்.

களிறு போன்ற வீரப் பெருமகனாராகிய அப்துல்லா அவர்களுக்கு உற்ற துணைவியாகவும் (பிடி) அவருடைய உயிராகவும் வாழ்ந்தார்கள். ஆமினா "தலைவன் தாள் தலைப்படல் தலைமகளுக்குரிய சிறந்த பெண்மைப் பண் பல்லவா?

'... களிறுக்கோர் பிடியும் போலவர் உயிரென விருந்தசைந் தொசிந்த பூங்கொடி மயிலெனு மாமினா வென்னு மங்கையே',' 1. சீறா. நபியவதாரப் படலம் 60 2. சீறா. நபியவதாரப் படலம் 9