பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

181


என்று சிறப்பிக்கும் உமறுவின் உவமைத்திறன் ஆமினாவின் பெண்மை நலத்திற்குப் புகழ் காட்டுகிறது.

அன்னை ஆமினா அப்துல்லா இல்லில் புகுந்து சுடர் விட்டு எழும் முழுமதியாக இருந்தார்கள். ஒளிமிக்க மாணிக்கமாக விளங்கினார்கள். தனிச் சிறப்புகளைத் தன்னிடத்தே கொண்ட தங்கக்கொடி 'நற் பூவையார்’, ‘கற்பெலாம் திரண்டு உருக்கொண்ட கன்னி' என்று ஆமினாவின் உள்ளத் தூய்மையையும், ஒழுக்கச் சிறப்பினையும் தெரிவிக்கும் உமறுப்புலவர் இன்று ஒருபடி மேலே சென்று,

"அறத்தினுக் கில்லிட மருட்கோர் தாயகம்
பொறுத்திடும் பொறுமையிற் பூமிக் கெண்மடங்
குறைப்பெருங் குணத்தினுக் கொப்பிலாமணி
சிறப்பினுக் குவமையில் லாத செல்வியே".[1]

என்று பாடி, நபிகள் நாயகத்தின் அன்னையின் புகழை உயர்த்துவதோடன்றி அன்னையின் பெண்மை நலத்திற்கு அழியாத முத்திரையையும் பொறித்து விடுகின்றார். உவமையே இல்லாத உயர்ந்த நிலையை நல்கி மகிழ்கின்றார். புலவர் மன்பதை காக்க வந்த புண்ணியனைப் பெற்ற தாய்க்கு தாய்மைக்கு புலவர் செய்யும் கைம்மாறு அல்லவா இது!

அறச்சிறப்பு, அருட்சிறப்பு, பொறைச்சிறப்பு. குலச் சிறப்பு நான்கும் நாயகத் தாயார்க்கு நவிலப்படுகின்றன.

உலக மக்கள் உள்ளத்திலே உயர்ந்ததாக, கிடைப்பதற்கு அரிதாக, ஆழ்கடலில் ஆழ்ந்து வளரும் செம்பவளம் கொம்பை ஆமினாவுக்கு உண்மையாக்கி காட்டுகிறார், உமறுப்புலவர் குலத்தின் பெருமையை உயர்த்திய பெருங்கொடி ஆமினா, குறைஷியர் குலத்தை ஒரு பெருங்கட


  1. 1. சீறா. நபியவதாரப் படலம் 11