பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

185


காட்சி இரக்கமுடையார் நெஞ்சத்தை இளகவைப்பதாயமைந்துள்ளது. தாய்க்குத் தன் குழந்தையைப் பிரிவது போன்ற துன்பம் வேறென்ன இருக்க இயலும்!

திருமண இன்பத்தையன்றி வேறெந்த இன்பத்தையுமே காணாத ஆமினா-கணவன் மறைவால் ஏற்பட்ட கலக்கம், இனத்தார் துணையில்லாததால் ஏற்பட்ட துன்பம், வறுமைத் துன்பம் ஆகியவற்றால் உழன்று இதோ இப்பொழுது பெற்ற பிள்ளையையும் பிரியும் துன்பமாகிய பெருந்துன்பத் திற்கும் ஆளாகின்றார். தாய்-சேய் பிரிவை உமறு உருக்கமாக உரைச்கின்றார். பெற்ற தாயின் பேரன்பும், தன் பிள்ளையை வளர்க்க இசைந்த செவிலியைத் தன் உடன் பிறந்தாளாகக் கருதும் பரந்த அன்புள்ளமும், நம் மகன் எதிர்கால வாழ்வில் கொண்ட கருத்தும் புலவர் கூற்றிலே சிறந்து நிற்கின்றன.

"தம்ப திச்செல விருவருஞ் சாற்றிய மாற்றஞ்
செம்பொற் பூங்கொடி யாமினா கேட்டுளத் திடுக்கிட்
டம்பரத்தெழு முழுமதி நிகரகு மதுவைக்
கம்ப னிந்தசெங் கரத்தெடுத் துவகையிற் கலுழ்ந்தார்", [1]
"தேன்கி டந்தசெங் கனியிதழ்ப் பவளவாய் திறந்து
வான் கிடந்தொளிர் மதியினு மொளிர்முகம் மதுவை
கான்கி டந்தமெய் யுறமுத்த மிட்டுடன் களிப்ப
ஆன் கி டந்தவேல் விழிமல ரிணையிலொத் தினரே" [2]

ஆமினா நபிகளாரை உச்சிமுகந்து, முத்தமிட்டு, உடல் களிக்கக் கண்ணால் கண்டு முகத்தோடு முகம் இணைத்து விடை பெறுகின்றார்.

"அமரர் நாயக மேபுவி யரசருக் கரசே
தமரி னுக்கொரு தீதைமே யார்க்குந் தாயகமே


  1. 1. சீறா. அலிமா முலையூட்டுப் படலம் 56
  2. 2. சீறா. அலிமா முலையூட்டுப் படலம் 57