பக்கம்:சிந்தைக்கினிய சீறா.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

187


செய்ந்நன்றி கொன்றார்க்கு உய்வில்லை' அல்லவா! இதோ! நன்றி பாராட்டும் அன்னை ஆமினாவின் தூய அன்புள்ளத்தைப் போற்றுகின்றார் உமறுப்புலவர்.

"... ... ....
   முகிலெனுங் குழலலி மாவை

யிலைத் தளிர் விரல்கண் முதுகுறப் பொருந்த

   வின்னுயிர் பொருந்தல்போற் றழுவி

நிலைத்தபொற் பாவையெனவரு கிருத்தி

   நெறியுடன் பலமொழி புகழ்ந்து

மலைத் தடம் புயத் தா ரீதையும் போற்றி

   மகிழ்ந்தன ராமினா வன்றே"

[1]

மதின மாநகரத்திலுள்ள உறவினரைக் காணச் சென்ற ஆமினாவிடம், நபிக்கு இன்னலிழைத்திடப் பகைவர் அங்கும் உள்ளனர். எனவே மக்க மாநகர் செல்வது சிறந்ததென்று உறவினர் எச்சரித்தனர். அவர் சொற்கேட்டு உள்ளம் வெம்பிய ஆமினா தம் மகன் முகம்மதுவுடன் 'பிடியும் களிறும்’ போல அடலிகள் பல கடந்து வந்தனர். இந்தப் பயணத் தில் தன்னை வெற்றி கண்டு வந்த துன்பத்தையே வெற்றி கண்டு விட்டார் அன்னை ஆமினா அப்துல்லா மரணமடைந்த அபுலா என்னும் தலத்திலேயே சுரம் கண்டு இறந்துவிட்டார். ஆமினா அவர்களுக்கு 20 ஆண்டுகள் : அன்னை ஆமினா ஈன்ற முகம்மதுவுக்கு ஆறு ஆண்டுகள் ஒரு மாதம்.

நபியின் இளமைப்பருவம், திருமணம், இல்வாழ்க்கை, அவர் நிறுவிய தீனுல் இஸ்லாம், அவர் பெற்ற சமயச் சிறப்புகள் எதையுகே காணக் கொடுத்து வைக்கவில்லை ஆமினா. என்றாலும் முகம்மதுவின் திருமணக்காட்சியைக் கண்டு களித்த தாய்மார்கள் புனிதர் முகம்மதுவின் தாய் ஆமினாவை நினைவு கூர்ந்து இரங்கிக் கூறுவதாய்ப் பாடும் உமறுவின் பாட்டு நம் உள்ளத்தைத் தொடுகிறது.


  1. 1. சீறா. அலிம முலையூட்டுப் படலம் 95